சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
தாலப்பருவம்4 / 11
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் · அந்தகக்கவி வீரராகவ முதலியார்
தாலப்பருவம்
22வேறு✓
மகரப் பரவைத் திரையிற் பாய்திரை
மானப் புனிதச்செவ்
வாணீ ரிதழித் தேனீ ரலையின்
மலையப் பலகாலும்
உகரக் கனகக் கனகிங் கிணிநா
முரலத் தழுவுநிலா
முறுவற் செம்முக மாறினு மைம்முக
முத்தம் பெறுநேயா
சிகரத் திகிரிக் கிரியுந் திசையிற்
கிரியுஞ் சரியக்கார்
திரியப் பொருவோ ரிரியப் புவியும்
சேடர்ப டாடவியும்
தகரக் கடவுந் தகரே றுடையாய்
தாலோ தாலேலோ
சமர மயூரா குமர செயூரா
தாலோ தாலேலோ.
23✓
வாளுஞ் சங்கு மிளங்கொடி வள்ளையும்
வள்ளப் பவளமும்வால்
வளையுங் கிளையும் மிளைய குரும்பை
வடமும் படமுந்தூ
சாளுங் கொம்பு மரம்பையு மலவனும்
அம்புய முந்தலைநாள்
அன்பிற் கனலொறு மென்பிற் குதவி
யழைக்குங் கவிநாவாய்
தோளுந் தொங்கலு மாறிரு கரமும்
தொடியுஞ் சிறுமுறுவல்
சொரிகனி வாயுந் திருவரை வடமும்
தொடுகிங் கிணியொலியும்
தாளுந் தண்டையு மழகிய பெருமாள்
தாலோ தாலேலோ
சமர மயூரா குமர செயூரா
தாலோ தாலேலோ.
24✓
காலைத் துயிலைப் பெடையோ டொருவிக்
கடிமறு கிற்சிறகைக்
குருகக் காயிள வெயிலிற் கோதிக்
கழனித் தலைபகலே
பாலைக் கவுரி தரப்பரு கிப்புன
லாடிக் களியன்னம்
பனிமா லைச்சோ லைக்கிடை யடையும்
பாலித் திருநாடா
வாலைக் கமலத் தவரைப் பிரியா
வரிபிர மாதியரோ
டண்டமொ ராயிர கோடியு முண்டுண்
டாரவ ளர்க்குமறச்
சாலைத் தலைவி தவக்குல மணியே
தாலோ தாலேலோ
சமர மயூரா குமர செயூரா
தாலோ தாலேலோ.
25✓
பாயா றெனுமத் தொகுதிக் கிறைவிப்
பகிரதி செவ்விமுகப்
பனிமதி மண்டல மாயிர மிசையிற்
பசியகொ டிக்கமையாப்
போயா றடியுந் துவையா வனசப்
போதீ ராயிரமும்
பூவொடு பூவைத் தென்ன வழுத்தும்
பொலிதண் டைத்தாளா
தீயா றும்படி யேழ்கடன் மொண்டு
திரண்டெழு கொண்டலெனத்
தெள்ளமு தப்பெரு வெள்ள மடிக்கடி
திருமுலை யீராறாய்த்
தாயா ரும்பொழி வாயா றுடையாய்
தாலோ தாலேலோ
சமர மயூரா குமர செயூரா
தாலோ தாலேலோ.
26✓
கைத்தடி கொண்டுறி பாற்குடி கொண்ட
கடம்புரை செய்துபுரைக்
கால்வழி யிற்பொழி பால்வழி யிற்கக
னத்துநி லாவழியே
கொத்தடி விண்ட மலர்க்குழு தத்திதழ்
போலிதழ் விண்டளவில்
கோவியர் கண்டிரு காவி சிவந்து
கொணர்ந்துரல் கட்டியநாள்
மத்தடி பட்டவர் தங்கை குயத்தினும்
வைகைந திக்கரைவாய்
மாறடி பட்டவர் வீறு புயத்தினும்
மாறிய டிக்கடி போய்த்
தத்தடி யிட்ட சதங்கை யடித்தல
தாலோ தாலேலோ
சமர மயூரா குமர செயூரா
தாலோ தாலேலோ.
27வேறு✓
ஈர மனத்தவர் வாழ்வாய் நோவாய் வீழாமே
ஏம புரத்திரு வானா ரானா ரானாமே
தூர விடக்கட னீரோ டோது ரோடாமே
சோரி யுறப்பொரு வேலா தாலோ தாலேலோ
பார வயற்றுயி னாகூர் கால்வாய் பால்பாயப்
பாயெரு மைக்கதி யாலே மேலே சேலேபோய்
ஆர முழுக்குழி சூழ்சே யூரா தாலேலோ
ஆறு முகப்பெரு மானே தாலோ தாலேலோ.
28✓
சோலை வனக்கர னோடே தேர்கா லாளோடே
தோளெனும் வெற்பிரு பானா னானான் மானானான்
வேலை யுரத்தெறி கோலே மாலே போளாவான்
மேன்மரு கப்பெரு வேலா தாலோ தாலேலோ
மாலை யெனத்திரி மீனா மீதே னானாமே
வாரி யலைத்தலை சாறே றாமே மாறாமே
ஆலை பலப்பல பாய்சே யூரா தாலேலோ
ஆறு முகப்பெரு மானே தாலோ தாலேலோ.
29வேறு✓
வருண னுக்குலக நிகர்தரக் கமல
மலர்மடுத் தமடு மாநீர்போய்
வயல் புகப் புகுது கயல்களித் துகள
வயமருப் பெருமை காவூடே
கருண முக்கரட களிறெனச் சிதறு
கதிபடக் கதலி தேமாவீழ்
கனிகு வித்தபல குவைது வைத்தளறு
கமழு மிக்கபிறை யூர்நாடா
தருண முத்தமுலை மலைக டுத்தமதி
சயில புத்திரித னோர்பாலா
சலதி வட்டமுழு தலற நெட்டவுணர்
சமரில் விட்டெறியும் வேல்வீரா
அருண வப்பரிதி கிரண மொத்ததிரு
அழகு டைக்கடவுள் தாலேலோ
அறம்வ ளர்த்தருளு மிறைவி பொற்புதல்வன்
அறுமு கக்குரிசில் தாலேலோ.
30✓
மடையை முட்டுவன கரைநெ ருக்குவன
மழுவு ருக்குவன மாநீர்போய்
வயல்க லக்குவன கதிர்வ ணக்குவன
வளைது ரத்துவன தேனேசூழ்
தொடையை யெற்றுவன வளியெ ழுப்புவன
சுவைவி முத்துவள வானூடே
சுடர்வெ ருட்டுவன வெழிலி தத்துவன
துளியி றக்குவன கீழ்கால்வாய்
இடையை யெட்டுவன கமுக லக்குவன
எருமை மொத்துவன சேலேபாய்
இருபு றத்துவள மையுமி குத்தளகை
எனநி கர்த்தவொரு சேயூரா
அடையு மப்பரிதி கிரண மொத்ததிரு
அழகு டைக்கடவுள் தாலேலோ
அறம்வ ளர்த்தருளு மிறைவி பொற்புதல்வன்
அறுமு கக்குரிசில் தாலேலோ.
31✓
இமர விக்கிரண மெனநி லத்துமிடி
யிடிப டுத்துவெளி மீண்மினால்
எறிதி ரைத்திரளு மிருக ரைப்புரள
இளம ரப்பொழிலு மேயாமே
பமர வர்க்கமல கரிமு ழக்கிவிழு
பலம லர்க்குவையு நீரோடே
படுக டற்பெரிய மடும டுத்துரக
படநெ ளித்தொழுகு பாலாறா
தமர நெட்டுவரி மகர மச்சமொடு
தடந திப்படுக ராறாயே
தவழு மிக்கசுரி முகமு கத்துவிடு
தரள வெக்கரிடு சேயூரா
அமரர் பொய்ச்சிறையு மவுணர் மெய்ப்பொறையும்
அறவ றுக்குமுனி தாலேலோ
அறம்வ ளர்த்தருளு மிறைவி பொற்புதல்வன்
அறுமு கக்குரிசில் தாலேலோ.