முருகன் App
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
காப்புப்பருவம்2 / 11
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் · அந்தகக்கவி வீரராகவ முதலியார்

காப்புப்பருவம்

2திருமால்✓
உலகமார் பலகோடி யுயிருமுயிர்த் துடையாள்
உபயமுலைத் தலையமுதி னொழுக்கருந்துங் குருந்தைத்
திலகமார் மகுடமிசைக் கடம்பலரு மரசைச்
செய்கைவளம் பதிதெய்வ சிகாமணியைப் புரக்க
இலகுமார் பகலமெலாங் கமலையிடைக் கொடுத்தும்
எழுந்துவிழும் பரிதிமதி யிருகைவிடா தெடுத்தும்
பலகமார் படிகமந்த பாப்பமளிப் படுத்தும்
பாற்கடன்மேல் விழிவளருங் கார்க்கடன்மே னியனே.
3வன்மீகநாதர்✓
வேறு
பூநாறு பொற்பிற் கடம்பன் றனைப்புங் கவர்க்காகவே
போராடு சத்தித் தடங்கஞ் சனைப்புன் சொலைத்தீருமால்
பானாறு முத்தப் பரங்குன் றனைப்பண் டுமைத்தேவியார்
பால்வாய னைப்பச் சிளங்கந் தனைப்பண் பளித்தாளுமால்
கானாறு பக்கத்தி லெங்குங் குதிக்குங் கயற்பாவிலே
காவாயி ரத்துப் பசுங்கொம் புதிர்க்குங் கனிக்கோடிபாய்
தேனாறி ரைத்துக் குரம்புங் கரைக்குந் திரைப்பாலிசூழ்
சேயூர் தனிற்புற் றிடங்கொண் டிருக்குந் திருத் தாதையே.
4முத்துவாரியம்மையார்✓
வேறு
மகரமெறி கடல்சுவற விடுசத்தி வீரனை
வடவரையி னருவிபுரை வடவச்ர மார்பனை
மருவிலறு முகனைநறு மதுமிக்க நீபனை
மதுரையிறை யவர்பொருளை யளவிட்ட தூயனை
அகரமுத லெழுதலென வகிலத்து மூலனை
அனலிபெறு மனைவிதள தருமைக்கு மாரனை
அருணகிரி சொரிகவிதை யமுதத்தி னேயனை
அரன்மகனை யரிதன்மரு கனைநட்பி னாள்பவள்
நிகரசல வசலமக ணிருதப் புராதனி
நிமலையநு பவகமலை வனதுர்க்கை மாலினி
நிலவலய முழுதுயிரை நிருமித்த காமினி
நியமவறு சமயநெறி நிறுவிட்ட மாயினி
சிகரகிரி விலின்வலவர் தெரிசித்த மோகினி
சிவபாமை தருமையுமை திலதத்தி லானணி
திருப்பரிதி மதிமுளரி யொருமுக்க ணாயகி
திரையர்புரி வடுகௌரி திருமுத்து வாளியே.
5கங்காதேவி✓
வேறு
முதியதிரி புவன பதவி புதைதரப் போர்த்தவள்
முனிவர் முனிவினெரி சகரர் கதிபுகச் சேர்த்தவள்
முதல்வன்முதல்விகர வியர்விலொலிகெழப்பூத்தவள்
முழுகு மனைவரையு மொழுகும் வினையறத் தீர்த்தவள்
குதிகொ ளருவியிம கிரியின் மகளெனச் சீர்த்தவள்
குலவு சதமொருப திலகு முகமெடுத் தார்த்தவள்
குழகர் சடிலகுல மவுலி குடி கொளத் தாழ்த்தவள்
குமரி முதனதியி னரசி பதமெடுத் தேத்துதும்
விதியின் முடியுடைய விறல்கொ டறைசிறுத்தாக்கனை
வெளிறு முடுமகளி ரறுவர் முதுமறைத் தேக்கனை
விரியு முவரிமிசை வெயிலின் மயின்மிசைத் தோற்றனை
விமலர் செவியினொரு மொழியை மொழிபகர்ந் தேற்றனை
மதியை மதிதவழு மதுரை முதுதமிழ்க் கூட்டனை
வலிய தணிகைதனில் வளர்கு வளைமலர்ச் சூட்டனை
வழுவி லருணகிரி புகழு முதுதமிழ்த் தூக்கனை
வளவ நகரின்வட தெருவின் முருகனைக் காக்கவே.
6சித்திவிநாயகர் வேறு✓
மருவரு சுருப்பொலி கலித்ததார் நீபனை
வடபகி ரதிக்கொடி வளர்த்தவா காரனை
வரைபக வெடுத்தெறி தடக்கைவே லாளனை
மகிதல மிமைப்பினில் வளைத்துமீள் வீரனை
வெருவரு பணிக்குல மலைத்தபோர் மாவனை
விமலைதன் முலைக்குட மடுத்தபால் வாயனை
விபுதர்தொகு திச்சிறை யறுத்தபூ தேசனை
விதிபகை ஞனைத்தனி புரக்குமோர் காவலன்
இருவரை யொருத்தரென வைத்தகோ மான்மகன்
எழுகடன் மடுத்திடர் படுத்ததாண் மூடிகன்
இரணிய பொருப்பெழுதி யிட்டமா பாரதன்
இதுபவள வெற்பென வெறித்தநீண் மேனியன்
அருவரை யெடுத்தென வெடுத்தபான் மோதகன்
அவல்பயறு முப்பழமொ டப்பமா மோதகன்
அளகைகன கப்பதி நிகர்த்தசே யூரினில்
அவரவர் நினைத்தது முடித்தமால் யானையே.
7சரவணப்பொய்கை✓
வேறு
ஆலைக்கே கரும்பொழியுப் பொழிசாறு வழிதோ
றாறதிரும் வயற்செய்கை யாறுமுகத் தரசைப்
பாலைக்கே யடைகொடுத்து மொழிந்தபொய்யா மொழியைப்
பழிக்கு மொருதமிழ்க் குதலைப் பசுங்குருந்தைப் புரக்க
காலைக்கே மலர்க்கமலத் திடைக்கமல மாட்டிக்
கடும்பகற் கேபசித் ததெனக் கார்த்திகைப் பாலூட்டி
மாலைக்கே திரைக்கரத்தால் அம்புலியுங் காட்டி
வைகறைக் கேசுரும் போட்டி வளர்த்த சரவணமே.
8வேலாயுதம்✓
வேறு
மருங்க டுத்தவர்ப ராவாய்
வணங்கு மெய்த்தவர்த யாவாய்
மகிழ்ந்த முக்கணர வாவாய்
வழங்கு முற்சுருதி வாழ்வாய்
ஒருங்கு கற்றவர்வி னாவாய்
உகங்க ளிற்பெரிய தேவாய்
உயர்ந்த மற்றெமது சேயூர்
உறைந்த பொற்குகனை யாள்வாய்
அருங்க டல்சுவறு தீயாய்
அகன்புவிக் குதவு தாயாய்
அகழ்ந்து வெற்புருவு கூராய்
அறந்த ழைத்தபழ வேராய்
இருங்கி ரிக்குமரி கூறாய்
இறைஞ்சு மப்பகைவர் பேறாய்
எழுங்க திர்ப்பரிதி போலாம்
இவன்றி ருக்கைவடி வேலே.
9வைரவக் கடவுள்✓
வேறு
நிலைது றந்தவஞ் சசுர கம்புகா
நிமலர் மைந்தனைக் கமலர்தோள்
நெரிப டத்தொடுத் தொருசி றைக்குள்வைப்
பவனை நீபமா லிகையனைத்
துலைது றந்தவண் டரள வாணகைத்
தோகை வள்ளிபொற் பாகனைத்
துய்ய செய்கையாள் பவனை யாள்பவன்
கையி னாககங் கணமொடுங்
கொலைது றந்தவித் தகர்வி ழிப்புலம்
குளிர ஞாளியந் திரளொடும்
குவல யப்பிதா வொருந்த லைக்கலத்
தொடுமி டித்துடிக் குரலொடும்
கலைது றந்தவத் திரும ருங்குடுத்
துடைய மேகலைக் கலையொடும்
கழல்சி லம்பொலித் திடவ ருந்தனிக்
கரிய கஞ்சுகக் கடவுளே.
10கார்த்திகைத் தாயர்✓
வேறு
நாட்டுப் பிறையூர் வளநாட்டு
நயங்கூர் சேயூர் நறுங்கடம்பின்
ஏட்டுப் புயனைத் தினம்புரப்பார்
இவனுக் கமுதந் தினிதிருப்பார்
ஆட்டுக் கொருகால் புகவகுப்பார்
ஆட்டுக் கருகா மருங்கணித்தா
மாட்டுக் கொருமுக் கால்கொடுப்பார்
வானத் துடுமா மடவாரே.
11பிரணவப்பொருள்✓
வேறு
முறங்காது கடுத்தகடக் களிற்றயிரா வதத்தன்
முதற்பதவிக் குதவியென முளைத்ததெய்வ முளையை
மறங்காது வேலியையிற் றழைத்தெழுகற் பகத்தை
வளவர்வளம் பதித்தோகை வாகனனைப் புரக்க
இறங்காத சடைமகுட மிறக்கியொரு செவிதாழ்த்
திருநாலா யிரமுகத்துக் கொருக்காலென் றிருக்கால்
உறங்காத வெண்கண்ணைச் சிறைவிடுக்க வுலகுக்
கொருபொருளா மவன்கேட்கு மோரெழுத்தின் பொருளே.