முருகன் App
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
சிறுதேர்ப்பருவம்11 / 11
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் · அந்தகக்கவி வீரராகவ முதலியார்

சிறுதேர்ப்பருவம்

92✓
வாடை யடிப்பொடு தென்கரை யந்த
வசந்த னடிப்பொடுப்பின்
வடகரை கொண்டன் மடங்கு மடிப்பொடு
மேல்கரை மண்டடியங்கக்
கோடை யடிப்பொடு கீழ்கரை மோதி
அலைந்த சலஞ்சலமும்
கோல வலம்புரி யும்பல கோடி
குழாமோ டிக்குடி போய்ப்
பேடை யனத்திரள் சேவ லெனத்தனி
பின்பு தொடர்ந்துசெலப்
பேரக ழிக்குழி யாழ விழுந்து
பெருங்கா லுக்குழலும்
ஓடை யிடத்தை விடுத்த செயூரா
உருட்டுக சிறுதேரே
உலகை வலம்புரி கலப மயூரா
உருட்டுக சிறுதேரே.
93✓
துப்பள வுங்கட லைச்சுடு தொன்மை
'யறிந்தழு தக்கடலும்
சூழ விழுந்து தொழுந்தொழில் போல
எழுந்தம திச்சுடரே
வெப்பள வுங்கை மழுப்படை யாளர்
அழைத்தன ரன்னவர்சேய்
மெய்ப்பதி சேரின் வராதன வந்தது
போலவி திப்பெயரோன்
தப்பள வில்லை விடுத்தி யெனத்தன
தன்னமி னத்தொடுபோய்த்
தால மறைப்ப விரித்த சிறைக்கொடு
தாழ்வது போலவகுத்
துப்பள மெங்கு நிரப்பு செயூரா
உருட்டுக சிறுதேரே
உலகை வலம்புரி கலப மயூரா
உருட்டுக சிறுதேரே.
94✓
பச்சிம திக்குண திக்கு வடக்கொடு
தெற்குவி ளங்காமே
பரிதியு மிந்துவும் வழிவில கிப்பல
காலுமி யங்குதிருக்
கச்சிற கர்க்கரு கிற்பெரு கிக்கவு
ரிக்கண மாதர்வரும்
கம்பை நதிக்கரை மாவடி வைகிய
கங்கைந திப்புதல்வா
நச்சிய ளிக்குல மொய்த்த மலர்க்கம
லத்துந டுப்படுவீ
நாகிள வாளை களித்து களித்து
நறும்பா ளைக்கமுகத்
துச்சிகு தித்திழி கின்ற செயூரா
உருட்டுக சிறுதேரே
உலகை வலம்புரி கலப மயூரா
உருட்டுக சிறுதேரே.
95வேறு✓
மாவைத் தனிக்கவிகை யெனவைத்த கம்பற்கும்
அருணவரு ணாசலற்கும்
வக்கிரே சற்குமக் காளத்தி யீசற்கும்
மயிலையங் கத்தையொருபும்
பாவைத் திறந்தந்த நாதற்கு மொற்றியூர்ப்
பகவற்கு மாதிநடன
பதிவடா டவியற்கும் வேதபுரி யற்குமே
பரம்பரம் தூவற்கும்
கோவைப் பெருஞ்சுருதி நந்திருத் திரர்கோடி
கோதில்சம் பாதியபயன்
குலிசன்மால் கமலனார் முதல்வர்நா லிருவர்மெய்
கொண்டமார்க் கண்டன்முதலோர்
சேவைக் கழுக்குன்ற வாணற்கு மொருமைந்த
சிறுதே ருருட்டியருளே
செய்கையாய்சரவணப் பொய்கையாய்தோகையாய்
சிறுதே ருருட்டியருளே.
#96✓
நீறெழக் கனகக் கிரவுஞ்சங் கடந்தோடி
நிலம்வெதும் பக்கடலெலாம்
நிமிடமுற் சுடுவித்து மக்கடற் குழியேழும்
நிருதர்குரு திக்கடலினால்
மாறெழப் பழையமடு விற்பெரு மடுக்கண்டு
மாதுரை வேரறுத்தும்
வடமே ருவைச்சூழ வந்துமெதிர் காணாது
வாயிரக் கமையாது போய்க்
கூறெழக் கனசக்ர வாளம் பிளந்துமக்
கோபமா றாதுமீதிற்
கொண்டலை யெரித்தண்ட கூடந்தி ரித்தண்ட
கூடப் புறப்புனலையும்
சேறெழப் பருகித் திரும்புங்கை வடிவேல
சிறுதே ருருட்டியருளே
செய்கையாய்சரவணப் பொய்கையாய்தோகையாய்
சிறுதே ருருட்டியருளே.
97✓
வைவத் துரந்தாடு முரசுக்கு லேசன்மகன்
மகனாகு மொருதொண்டைமான்
வாரிதித் திரைநல்கு மன்னன் பெரும்பேர்
வரம்பெற்ற வெற்றிகொண்டான்
சைவத் தவப்பயனை யொத்தவன் வழிவந்த
தனையன் கழுக்குன்றனாம்
தக்க செம்பியவளவன் வந்துனக்காலயம்
சகலமும் தந்ததற்பின்
பௌவத் தலத்தெழு சகாத்தமோ ராயிரத்
தொருநாலு நூற்றின்மேலும்
பயிலுநாற் பத்துமூ வருடமாம் விபவருட
மகரம்ப குத்ததிருநாள்
தெய்வத் திருத்தே ருருட்டியது போலவிச்
சிறுதே ருருட்டியருளே
செய்கையாய்சரவணப் பொய்கையாய்தோகையாய்
சிறுதே ருருட்டியருளே.
98✓
மருத்தோய் சுருப்பொலி கலித்தகற் பகமாலை
மவுலித் தலைத்தேவரும்
மாதவர் களுஞ்சிறை புக்கடிக் கடிமுன்
முறையிட்ட பொழுதுமுழுதும்
பெருத்தேர் துரக்கும் பிரானே வலிற்றலை
பிரிதந்து தென்புலம்போய்ப்
பேரிட்ட சூரனைப் பாரிடத் தானைப்
பெருங்கடற் கொண்டுபொருநாள்
குருத்தேர் மதிக்கின்ற கோட்டுமல கோட்டுடைக்
குருகின் பெயர்க்குன்றமும்
குவலயத் தாழியுந் தூளெழப் பத்துமா
ருதமுமுட் கோல்கடாவும்
திருத்தே ருருட்டியது கண்டிலார் காணவிச்
சிறுதே ருருட்டியருளே
செய்கையாய்சரவணப் பொய்கையாய்தோகையாய்
சிறுதே ருருட்டியருளே.
99✓
துய்யசெங் கோடையும் பழனியுந் தணிகையுஞ்
சுற்றிய விடைக்கழியுமுற்
சொல்லிய விராலியுஞ் சிகரமுஞ் சசுரர்கைத்
தொடுகடற் சூழுமீழத்
தையதென் கதிர்காம மென்னுமலை முதலாய
தாகத் திருப்புகழெனா
அருணகிரி நாதன்பு கழ்ந்தபல மாலையும்
அறிவருள மிக்கதமிழால்
வையக மதிக்கும் பரங்குன்றமுஞ் செந்தில்
வந்தசீ ரலைவாயுநீர்
வளவயற் றிருவாவி னன்குடியு மேரகமும்
மருவுகுன் றுதொறாடலும்
செய்ய பழமுதிர் சோலைமலையு நிலையாயவா
சிறுதே ருருட்டியருளே
செய்கையாய்சரவணப் பொய்கையாய்தோகையாய்
சிறுதே ருருட்டியருளே.
100வேறு✓
வீடாம ரப்பெரிய கோடாட முப்பொழுதும்
வீழ்மாம் பழத்தினமுதோ
வீறாலு யிர்க்குலமி றாலாமி னத்தைமன
விழைவோ டலைத்தமழையோ
ஓடாவ யப்பகடு கோடாயி ரத்தினடி
யொழியா தொழக்குமதமோ
ஓராயி ரத்துறையி னாராத னைக்குறவர்
ஒழியா வளக்குருதியோ
நாடாவி கற்பவினை யாடாமுகத்தினிய
நறுநாக முற்றநறவோ
நானாவி தத்தருவி கானாமெ னப்பரவி
நதிகோடி யிற்பொருதுபாய்
சேடாச லத்தகிரி யூடாத ரிக்குமுகில்
சிறுதே ருருட்டியருளே
சேயூர தத்துபரி மாயூர சத்திதர
சிறுதே ருருட்டியருளே.
101✓
வாயே மலர்க்குமுத மாயே சிவப்பொழுகு
முறையே மணக்குமிறையே
வானாறு மக்கடவுண் மீனாறு முத்தமுலை
வயன்மேல் விளைத்தபயிரே
போயே கதிக்கணுகு தூயார் பிறப்பரவு
பொரவே யுதித்தகதிரே
போகாலை யத்தமரர் மாகால்வ ளைத்ததளை
புதிதேது மித்தவரமே
சாயேமெ னப்பொருத மாயாவி தத்தவுணர்
தமதா ருயிர்க்குநமனே
தாராத ரப்புரவி வீராக ரக்குலிசா
தருவாழ வைத்தகுருவே
சேயே யெனக்கினிய தாயேய ருத்திகொடு
சிறுதே ருருட்டியருளே
சேயூர தத்துபரி மாயூர சத்திதர
சிறுதே ருருட்டியருளே.