சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
செங்கீரைப்பருவம்3 / 11
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் · அந்தகக்கவி வீரராகவ முதலியார்
செங்கீரைப்பருவம்
12✓
வேயாயி ரங்கோடி சூழ்கின்ற வெற்பெங்கும்
வீழ்கின்ற மேகத்துவாய்
வெள்ளம் பரந்துபல வுள்ளம் பெருஞ்சோலை
வேரித்த மாலந்திளைத்
தோயாது சாரற்க லங்கருவி யைப்புதைத்
தொளிர்வாச்சி ரக்குவைசிதைத்
துழுவைமரை யிரலையரி வழுவைகர டிகள்வருடை
யொழுகச்சு மந்துவழிபோய்த்
தூயாறு மூன்றுமா முத்திப் பெருக்கைத்
துரக்கும் பெருக்கமிதெனச்
சுரிமுகத் திரையும்வெண் ணுரையுங் கரைப்புறந்
தோறும்பு ரண்டுபெருகும்
சேயாறு பாலாறு செறிதொண்டை வளநாட
செங்கீரை யாடியருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடியருளே.
13✓
இந்தூர் வரைக்குழா மொன்றொடொன் றெதிர்கின்ற
தென்னக் கலோலக்குலத்
தெதிருந் திமிங்கில திமிங்கில கிலங்கோடி
இகலிப்பொ ரப்போதலும்
கொந்தூர் துழாய்மவுலி முதன்மத் திடப்படு
குரைப்பெனப் பகிரண்டமாம்
கோளமும் பூச்சக்ர வாளமும் வெடிதரக்
குடிபோய் நிணச்சுறவெலாம்
நந்தூர் கரைக்கேற வகில்சந் தனப்பிளவும்
நக்கபவ ளக்குவாலும்
நகைநித்தி லத்தொகையு மிப்பியு மிதந்தோடு
நரலையிற் சீரலையின்வாய்ச்
செந்தூர திருவாவி னன்குடிப் பெயரூர
செங்கீரை யாடியருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடியருளே.
14✓
இலைக்கோடு சதகோடி கற்பகா டவியோ
டிணங்கிப்பி ணங்குமகிலாம்
ஈரப்பெ ருங்காடு மாரப்பெ ருங்காடும்
இவரும்ப னிச்சாரல்வாய்
அலைக்கோடு பொருவுந்தி திரியக்கி ராதர்தம்
மரிவையர்கு ழாம்விழிபுதைத்
தலமந்து திரிதரப் பலமந்தி பெருமரத்
தவயம்பு ரக்கவலமாக்
கலைக்கோடு மொருமுக் கடாசலக் கோடும்
கறங்கிறால் குத்தியவிழும்
கவிழுங் கொழுந்தாரை யாயிர முகங்கொடு
கடற்கிரும டங்குபொங்கிச்
சிலைக்கோ டிழிந்தோடு செங்கோடை யங்கடவுள்
செங்கீரை யாடியருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடியருளே.
15✓
பெருவாய் மகோததி யனைத்துந் திறப்பப்
பிறங்குகுர வுஞ்சகிரியும்
பேரண்ட மும்பூரி மகேந்திரப் புரிசையும்
பிளவுறா வெளிதிறப்பக்
கருவாயின் மேகத்து வாகனன் புதல்வனைக்
கடவுளோ ரைச்சிறையிடும்
காவலன் கூடங் கபாடந் திறப்பக்
கடைக்காலை வேலையெழுநாள்
பொருவா யகம்புகப் பரிகரித் தேவிதன்
புணர்முலையு மாறுமீனப்
பூவையர் படாமுலையு மமுதந் திறப்பப்
புனற்கொழுந் தொழுகுபவளத்
திருவாய் திறந்தழுங் குதலைமத லாய்வாழி
செங்கீரை யாடியருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடியருளே.
✓
கறையடிக் கயமெட்டு மிதயந்தி டுக்கிடக்
கடலேழு மகடுகிழியக்
கதறிமே கம்பல கலங்கவுடு வுதிரவெங்
காரரா மவுலிசுழலத்
தறையடிப் பெயரவப் பாதலந் தெருமரச்
சக்ரபூ தரமுநெளியத்
தமரமு தண்டக் கடாகங்க டப்பத்
தயித்தியர் தருக்கிறைதரப்
பிறையடிச் சிகழிகைச் சசிநா யகன்பதம்
பெறநிறக் கவிரநவிரப்
16✓
பேரழ கெழுஞ்சிர நிமிர்த்திரு பதத்துப்
பெரும்பா ருடைந்துபுடையச்
சிறையடித் திருள்கெடக் கூவுசே வற்கிறைவ
செங்கீரை யாடியருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடியருளே.
17✓
புவிக்கே யிடந்தந்த சடரத்து நாபிப்
புலத்தாம ரைத்தலைமகன்
புகழும் பழஞ்சுருதி திகழுந் தனிப்பரம்
பொருண்மாறு பட்டவளவில்
தவிக்கே பிடித்திடுஞ் சிறைவிடுத் தருள்கெனச்
சகலப்பெ ருந்தேவரும்
சரணம் புகப்புகப் பிரமன் கிளத்தவும்
தள்ளாத பொருளோதுநாள்
கவிக்கே தெரிக்கின்ற தமிழின் சுவைக்கே
கலைக்கே தமக்கிணையிலாக்
கடலே குடித்தோர் செவிக்கேயு மக்கடற்
கடுவே குடித்தோர்திருச்
செவிக்கேயு முமைமுலைப் பானூறு கனிவாய
செங்கீரை யாடியருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடியருளே.
18✓
அக்காட வோநச்ச ராவாட வோமிடற்
றாலங்கி டந்தாடவோ
ஆறாட வோமதிக் கூறாட வோதோட்டுக்
கடிதிருச் செவிகடோறும்
நக்காட வோபுயக் கொன்றைநின் றாடவோ
நளினக்கை மலராடவோ
நவியாட வோநவி யங்கொதித் தாடவோ
நாலடித் துடியாடவோ
மிக்காட வோகொடு வரித்தோல் கரித்தோல்
விசைந்தாட வோநூபுரம்
வேதாள மொத்தெழுந் தாடவோ வறிகிலேன்
விண்ணாட மண்ணா டண்டண்
டிக்காட வாதாடு புக்காடு வான்முருக
செங்கீரை யாடியருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடியருளே.
19வேறு✓
கரைதோறும் வருவன கருநிற மேதிகள்
கண்டே விண்டோடக்
கடைசியர் கடையர்கண் மடையி னிலாம
லெங்கே னும்போதக்
குரைதொறு முழவெனு மதகுழி கோடிகள்
கம்பா யஞ்சாயக்
குழுமிய வறுபத ஞிமிறுகள் பாய்போ
தும்போ தம்போதித்
தரைதொறு மொளிவிடு சுடரவ னோடு
திண்டேர் திண்டாடச்
சகரர்கை தொடுமடு நிகர்மடு வாவி
யெண்கா தம்போதத்
திரைதொறு மெறிகயல் பொருதசெ யூரா
செங்கோ செங்கீரை
திரைசையர் தொழுதெழு கிரிசைகு மாரா
செங்கோ செங்கீரை.
20✓
குவைதரு துகிரொளி நிகரொளி மேவுங்
குன்றே குன்றேய்நங்
குழகர்த மடிநடை பழகி யுலாவுங்
கன்றே கன்றேயஞ்
சுவைதரு மழலையின் மொழிமறை நாறு
மெந்தா யெந்தாயென்
றொடுபரி புரவொலி செவிகலி தீர
வந்தாய் வந்தாய்பண்
டவைதரு முனிவரு மமரரும் வாழ
நின்றாய் நின்றாயென்
றகமனன் மெழுகென வுருகி விடாமன்
முன்போ டன்போடும்
சிவைதரு முலையமு தலையூறு வாயா
செங்கோ செங்கீரை
திரைசையர் தொழுதெழு கிரிசைகு மாரா
செங்கோ செங்கீரை.
21✓
கிளைபடு முடுகுல மொடுமுகில் போலு
மென்பூ வுங்காவும்
கிளிபல குயில்பல வளிபல பேடுட
னுங்கூ டுங்கூடும்
தளைபடு கழனியி லுழுநர்கை யார
வுந்தே ரும்பானும்
சததள மலர்குவ ளைகண் மலர்கொடி
சங்கோ டுங்கோடும்
துளைபடு மதகுழி பொழிமுலை மேதியி
னம்பா லுஞ்சேலும்
சொரிமத களிறென வருமிள வாளைக
ளுஞ்சே ருஞ்சாருந்
திளைபடு வளமழ கொழுகுசெ யூரா
செங்கோ செங்கீரை
திரைசையர் தொழுதெழு கிரிசைகு மாரா
செங்கோ செங்கீரை.