முருகன் App
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல்
வைத்தியர் ஆண்டியப்பர்
எச்சரிக்கை10 / 11
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல் · வைத்தியர் ஆண்டியப்பர்

எச்சரிக்கை

13✓
கருணாகரப் பொருளே கணபதியே எச்சரிக்கை
கதிராபுரி தரமேவிய கந்தா எச்சரிக்கை
கந்தா செல்வா கரமேவிய கருணா எச்சரிக்கை
வந்துயர் தீர்க்குமெங்கள் வணிகா எச்சரிக்கை
வணிகா செட்டிகுமரா கார்த்திகேசா எச்சரிக்கை
வருவார் பிணிநீக்கிய முருகா எச்சரிக்கை
முருகா அரிமருகர் ஆறுமுகனே எச்சரிக்கை
கருவான துதிக்கும் எங்கள்கந்தா எச்சரிக்கை
கந்தா கடம்பணிகா திருத்தணிகா சுப்பிரமண்யா
எத்தாகிய பேரூர் வருகந்தா எச்சரிக்கை
கதிரமலைக் கரசேஎனும் கருணைக் கிருபைக்கடலே
அதிரூப சிங்கார ஆறுமுகனே எச்சரிக்கை.