முருகன் App
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல்
வைத்தியர் ஆண்டியப்பர்
கருணைசெறி ஆறுமுகா8 / 11
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல் · வைத்தியர் ஆண்டியப்பர்

கருணைசெறி ஆறுமுகா

10✓
கருணைசெறி ஆறுமுகா கார்த்தி கேயா
கங்கையருள் காங்கேயா கருணைநேயா
பொருனர் தொழும் மந்திரதந்திர சொந்தகந்த
புனிதவனை அனுதினமும் போற்றுவோர்கள்
வருணமுறு நான்கினுமே வார்த்தை யீந்து
வருணமுறு சின்னச்சந்நிதியில் வாழும்
அருண வடிவேற் கரத்தாய் ஆடீ ருஞ்சல்
ஆறுமுக ஆண்டவரே ஆடீ ருஞ்சல்.