முருகன் App
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல்
வைத்தியர் ஆண்டியப்பர்
வாழி9 / 11
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல் · வைத்தியர் ஆண்டியப்பர்

வாழி

11✓
மருமேவு சிவபரனும் உமையும் வாழி
வயங்கு திருநீறு சிவமணியும் வாழி
உருமேவு அரசன் மனுநீதி வாழி
உலவுமுயிர் பரவுகல் லோடை வாழி
கருமேவு முகில்வாழி கடலும் வாழி
கற்றறியா அடியேன் சொற்கவிதை வாழி
திருமேவு சேவலுடன் மயிலும் வாழி
சின்னச் சந்நிதி முருகர் வாழிதானே.
12✓
மங்களம் ஜெய மங்களம்
நித்தியசுப மங்களம்
ஆனைமுகவர்க்கு மங்களம் எங்கள்
ஆறிரண்டு கையருக்கு மங்களம்
செங்கமல நாதருக்கு மங்களம் செல்வச்
சந்நிதிவாழ் முருகருக்கு மங்களம்
வீராதி வீரருக்கு மங்களம் நல்ல
வெள்ளி மயில்வாகனர்க்கு மங்களம்
சோதிவடி வேலருக்கு மங்களம் சிவ
சுப்பிர மணியருக்கு மங்களம்.