முருகன் App
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல்
வைத்தியர் ஆண்டியப்பர்
காப்பு1 / 11
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல் · வைத்தியர் ஆண்டியப்பர்

காப்பு

1✓
பொன்னுலக மன்னவற்குப் பூங்கா விதியருளும்
முன்னவனே ஆனை முகத்தவனே - என்னுடைய
தீத் தொழில்கள் நீக்கியே சிந்தைதனில்உறைந்து
காத்தருளல் உந்தன் கடன்.
2✓
பொன் பொருந்தும் தென்கதிரைப் பதிபேரி லொன்றும்
புகழ் பொருந்தும் தொண்டவர் வேலவன் பதிவாழ்
மின் பொருந்தும் செங்கதிரைக் கந்தர் தன்மேல்
விந்தை பொறும் அன்ன ஊஞ்சல் விரும்பிப்பாட
வின்பொருந்தும் கொங்கைமலை மங்கை பாகன்
மைந்தனோடு கந்த ணிந்து மகுடம் தாங்கும்
கொன் பொருந்தும் சிந்தூர மாமுகன் கல்லோடை
குணபதியாம் கணபதிதாள் கும்பிட்டோமே.
3✓
திருமருவுபுணரி இருபுறமு மேவும்
தெய்வசின்னச் சந்நிதியில் சிறந்து மேவும்
உருமருவு ஓங்காரத்து முதல்வனாகும்
உந்தன்மேல் ஊஞ்சலிசை உவந்து பாட
மருமருவும் மலர்மாலை மதியமோடு
வைத்த சடை உத்தமனார் மகிழவீன்ற
கருமருவு மும்மதத்து கும்பதம்ப
கணபதியை எஞ்ஞான்றும் கருது வோமே.