முருகன் App
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
காப்புப்1 / 11
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

காப்புப்

நூற்காப்புநேரிசை வெண்பாக்கள்கணபதி துதி✓
பைந்தமிழ்ச்சீர் மன்னுசென்னைப் பட்டினத்தூர் வாழவந்த
கந்த சுவாமி களிகூரும்-சுந்தரஞ்சேர்
பிள்ளைக் கவிதருவான் பேழைவயிற் றானைமுகக்
கொள்ளைக் கவின்மருவுங் கோன்.
கலைமகள் துதி✓
வல்லாண்மை துன்றுசென்னை மாநகரில் வாழ்குகன்மேல்
எல்லாரு மெச்ச இயம்புவாய்!-பொல்லா
விடம்பருகும் ஈசனொடு மேனாள் உதித்தாய்!
கடம்பனைய பிள்ளைக் கவி.