சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
காப்புப்பருவம்2 / 11
சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
காப்புப்பருவம்
1திருமால்✓
மணிநிலவு மரகதப் பிடிமருவு பாகத்து
வள்ளலார் தவமு தீர்ந்து
வன்னிவிழி வழியாறு பொறியென உருக்கொண்டு
வருமுருக வேளை, மகுடத்(து)
அணிநிலவு தலையாறும் அங்கதம் இலங்குபுயம்
ஆறிரண் டும்போ ருந்தும்
ஐயனைச், சென்னைமா நகரிலுறை கந்தனை
அளித்தருள வேண்டும் என்றே:
பணிநிலவு பாற்கடற் பள்ளிகொண் டானை, எழு
பாரும்உண்(டு) உமிழு(ம்) மாலைப்
பசுநிரை வருந்தாத வண்ணம்அந் நாள்உயர்
பருப்பதக் குடை பரிக்கும்
திணிநிலவு தோளானை, ஆழியொடு சங்கமும்
திகழச் சிறந்து ளானைச்
செல்வியுறு மார்பனைப் பலவிதத் தினுமிகச்
சிந்திக்கும் எமதுள்ளமே.
2பரமசிவன்
தன்னனா தானதான-தந்தனத் தாத்தனா✓
அன்னமாம் என,வேதன் விண்ணில்ஏ கிட,ஏனம்
அன்னமேல் கொடுமாயன் மண்புகப் பார்த்துள்ளார்
அண்ணமா முடிமீது வெண்மைசேர் மதிசூடும்
அண்ணல்,ஆ டகமாகும் அம்பலக் கூத்தனார்
அன்னையாய் உலகேழும் முன்னம்சৃ னியபாவை
அங்ஙன்ஓர் புறம்வாழ வுங்கொள்பொற் பேற்றதே(வு)
அம்மைவா தனைதீரும் உண்மைமா தவம்ஈயும்
அம்மநீ றணிவார்கள் சிந்தையிற் றேக்குவார்
கன்னல்வார் சிலைமாரன் என்னுமோர் படுபாவி
கன்னிமார் பலர்சூழ வந்தெதிர்ந்(து) ஆர்த்தநாள்
கண்ணின்ஆ ரழல்வீச தன்மையார், மழுமான்ஓர்
கம்மினோ(டு) அவிர்சூலம் ஒன்றுதைத் தீர்த்தனார்
கண்மைதீர் தமிழ்நால்வர் தம்மைநா டியசீலர்
கன்மம்ஆ தியவா(ம்)ம லங்கெடத் தாக்குவார்,
கைம்மதா சல(ம்)மாய உன்னினார், பலவாய
கண்ணியார், அவர்தாளை அஞ்சலித் தேத்துவாம்
வன்னம்ஆ யிரகோடி துன்னுசீர் பெறுதோகை
மஞ்ஞைவா கனம்ஏறும் மைந்தனைப் பூட்கையால்
வண்மைதோய் தரநீடு பெண்ணின்ஆ ருயிர்போலும்
மன்னை,மால் வரைசார்ப சுந்தினைக் காட்டில்வாழ்
வன்மைவே டுவர் பேதை கிண்ணமா முலைமோக(ம்)
மன்னுசா மியை,ஞான பண்டிதப் பேர்ச்சொல்வார்
மம்மர்நோய் மருவாது மெய்ம்மைவீ டதுசேரும்
வண்ணமோர் குருவாகும் நண்பனைக், கூர்த்தவேல்
சின்னதே யெனநாளும் எண்ணிஏ சிடும்ஈனர்
தென்னன்ஊர் புகமோதும் வன்பனைப் பாக்கொடோர்
தென்னன்ஆ ருயிர்சோரும் வெம்மைபோய் மிகுசுனல்
செம்மையாய் நிமிர்சீர்செய்(து) அன்பில்பொய்த் தீர்க்கமே
செம்முசா ரணராதி எண்ணிலார் கெடுபோர்கொள்
செம்மலாம் முருகோனை, அம்புயப் பூக்கள்நீள்
செந்நெல்ஆர் வயலூடு மென்மை ஓதிமம் ஓவில்
சென்னைமா நகர்மேவு கந்தனைக் காக்கவே.
பராசக்தி
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தன்னத் தனத்ததன தன்னத் தனத்ததன தானானா✓
அமல பரசிவ பசுபதி யெனும்ஒரு
கணவர், தனதிள முலைமயல் கொடுதினம்
உன்னிட்டம் எப்படிஅவ் வண்ணத்தி ருப்பன்எனும்
மொழியொ டநு தினம் அடிதொழ உளமகிழ்
சிவையை, இமவரை தருமக வெனவரு
சின்னக் குயிற் பெடையென் வண்மைத் தனிக்கொடியை
அகில முழுமையும் உதவிய சிறுவயி(று)
உடைய கவுரியை, மதன்வழி படஒரு
கன்னற் சிலைத்திறமை தன்னைக் கொடுத்தவளை வாடாதே.
✓
அளவில் சுகமுற உதவிடும் இறைவியை,
மரண மொடுபவம் எனும்இருள் இரிதலை
நண்ணிக் கழற்கமலம் உன்னித் தனக்குரிய
பொறியை நுவல்முழு மவுனிக ளதுசுழி
முனையில் நடமிடும் முதல்வியை, முருகவிழ்
வன்னத் தகட்டிதழ்கள் துன்னுற்ற புட்பவகை
அணியும் அழகிய குழலியை, அனம்நிகர்
நடையின் ஒயில்மலி வனிதையை, ஒருகவி
மின்னுற்(று) உவப்(பு) அடிசில் உண்ணச் சமைத்தவளை, வாளேநேர்
✓
சமர பிரபல பலமரு வியவிழி
யிலகு திரிபுர தகனியை, அடியவர்
கண்முற் றிகழ்ச்சிதரு கன்னிக்கி ளிப்பி(ள்)ளையை
வெளிறு(ம்) மலர்மிசை மதியென நிலவிய
சரசு வதிதிரு மகளெனும் இருவர்கள்
என்னச் சொலிப்பரவு தன்மைக்கும் ஒத்தபடி
தனையென் இகலவர் அடியொடு கெடவரும்
முனிவின் மிகைகமழ் திருவுளம் இசைவுறு
பொன்னைப், பணத்தில்மகிழ் புன்மைக் குணத்தினரை நாடாதாள்.
✓
சகுண முதன்மைகொள் பகவதி பயிரவி
விமலை அதிநய விகசித மொழிபல
பன்னித் தொடுத்துவரு பெண், ஒப்பில் கற்பினவள்
அறியில் அறிவரு செயலினள் எனவுணர்
பெரியர் தமையிகழ் கொடியவர் குடரணி
மின்னக் குதிப்பவளை, நன்மைக்கு வித்தனைய
தரும மயிலினை இமகரன் எனஒரு
பணியை விடுகரு ணையன்முதி யவள்தனை,
உண்மைக் கவிப்புலவர் உண்ணிற் கும்உத்தமியை, நான்நேர்வேன்;
3✓
மூமலம் உதவிய திரிகுண வழிசெலும்
மனதை யிருபத மலர்களில் ஒருவித(ம்)
மன்னத் திருத்தியருள் மெய்ம்மைக் குருக்கள்,அரன்
மதலை யெனலையும் அவர்பணி கொளும்உயர்
குரவன் எனலையும் நிசமெனும் நிலையினர்
விண்ணைக் குறிக்குமவர் இன்னற்ற விர்த்தகுகர்,
முகுள சததள பரிமள மதுகர
சலச மலர்திகழ் கரமுறு குறமகள்
எண்ணத் திருப்பதையும் முன்னிட் டியற்றும்அதி மாலோர்வார்
✓
மொளுமொ ளெனும்ஒலி யொடுமத அருவிகள்
வழிய விடும்எழில் குலவுறுஅ அவையவ
வெண்மைக் களிற்றின்மகள் பொன்மைக் குருக்கமிகு
சிறுவர், சரவண பவர்கதிர், அயில்வலி
யதுகொ டவுணர்கள் குலமற முனிபவர்,
மொய்ம்மொய்த் திசைக்கஅலர் செம்மைக் கடப்பமலர்
முருகு சொரிதரு குரவமென் மலர்செழும்
அலரி புனலிம லிகைதுள(வு) அறுகிவை
சென்னிக்கும் இட்டுரைசெய் எண்ணிக்கை யற்றமலை மேல்வாழ்வார்
✓
கமல மிசைவளர் திசைமுக னதுதலை
உடைத லிலதுபல் வயின்உயர் தரவுள
கைம்மற் செலுத்துமவர், முன்னைத் தொழிற்செய்தவர்,
திருட னெனஒரு தரம்அரு ணையில்ஒரு
புலவ னுவல்கையில் அனைவரும் விழைவொடும்
என்னைச் சொலச்சொலிய கண்மைத் தலைக்கடவுள்
கடலினொடு பொரு நையுமுத லியபல
புனலில் அனலில்முன் முழுகிய பனுவல்கள்
இம்மைப் பிறப்பினிலென் முன்னிற் பதைக்கருது சீர்தோய்வார்,
✓
கமட முதுகினில் ஒருமலை யினை அலை
தவள உததியின் நடுநடும் அரிபுகழ்
திண்ணப் புயத்தொருவர் தொன்மைக் குடைச்சரணர்
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தன்னத் தனத்ததன தன்னத் தனத்தஎனல்
கழறி அலகைகள் குதிகொள அமர்பொரும்
வயவர், தமிழ்நய மொடுபொருள் வளமுறு
சென்னைப் பதிக்குமரர், தம்மைப் புரக்கவென வேதானே.
4விநாயகர்
தன்னதன தானந்த தானனத் தாத்தனா✓
மும்மையுல கோர்என்றும் மூலவித் தாச்சொல்ஓர்
முன்னவனை ஈசன்றன் மேனியிற் போர்த்ததோல்
அம்மைநினை வுடொன்ற லால்எழிற் பூட்கையே
அன்னமுக மாவந்து ளானைமிக் கேத்துவாம்,
வெம்மைமலி சூரென்ற மாஅறத் தாக்கும்வேல்
மின்னும்அகல் மார்பங்கொள் வீரனைப் போற்றுவார்
செம்மையுறல் காணுங்கு கேசனைக் கீர்த்திதோய்
சென்னைநகர் வாழ்கந்த சாமியைக் காக்கவே.
5திருமகள்
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தன்னனா தனனதன தய்யனத் தாத்தனா✓
பங்கயம லர்ந்தனைய கண்குலவு கொண்டல்புணர்
பன்னியா கியஇளைய தையலைத் தேக்குபால்
பம்புகட லம்புலியு டன்றரவ ரும்பெருமை
பன்னுவார் பெறுகருணை வல்லியைப் போக்கொணா
மங்களம னந்தமுறு செந்திரும டந்தையினை,
வண்மைதோய் முனியரசு சொல்லும்நற் பாக்களாம்
வந்தனைபு னைந்தவளை இத்திரர்தொ ழுஞ்சரண
மன்னுவாள்தனை, இணையில் செல்வியைப் போற்றுவாம்
வெங்கண்அர(வு) அஞ்சநட னம்பயில் சிகண்டிமிசை
மின்னும்வே லுடனிலவு செய்யனைச், சேட்டையே
மிஞ்சமணர் துஞ்சமுதிர் செந்தமிழ்பொ ழிந்தவனை
வெந்நிடா தமர்புரியும் வல்லமைத் தோட்கள்சேர்
சிங்கம்நிகர் ஒன்பதின்மர் தந்துணையை, உம்பர்புகழ்
சென்னியா றுடையமுதல் வள்ளலைக் கோட்டிலோர்
செண்டுகொட றைந்துமகிழ் துங்கனை,வ ளம்பெருகு
சென்னைமா நகரில்முரு கையனைக் காக்கவே.
6பிரமன்
தன்ன தனதன தனத்த தத்தனா✓
மண்ணும் உயிர்களின் உடல்முற் றும் இட்டதாம்
வண்மை திகழ்கர மலரெட்டும்; வித்தைமா(து)
அண்ண மிளிர்சது முகநுட்பம் உற்றுவால்
அன்ன மிசைவரும் அயனைப்பழிச்சுவாம்
விண்ணுள் இமையவர் உறவைத்த சத்திவேல்
வெண்மை நிறமலி தருகுக்கு டப்புள்வாழ்
திண்ண பொழிபவர் பலாமெச்சு பொற்பினோர்
சென்னை நகருறை குகனைப் புரக்கவே.
7கலைமகள்
தந்ததன தானதன தத்தத் தனத்ததன
தன்னனா தனதான தத்தாத்த தத்தனா✓
என்றனது நாவினும்இ ருக்கைக் கிசைந்தவளை
எண்ணிலா மறைஓதி வைத்தாற்றல் பெற்றதால்
எண்டிசையின் நாவலரும் மெச்சச் சிறந்தவளை
இன்னநூல் பலபாடும் நட்போர்க்கும் வித்தெனா
நின்றவளை, வாலியநி றப்பொற் பமைந்தவளை
நின்மலா கரஞான்(ம்) முற்காட்டு பெட்பதே
நெஞ்சில்வளர் பேதையைஇ டுக்கத்தில் வந்துதவும்
நின்னயா தரவாணி யைப்போற்றி நத்துவாம்;
வன்றகுவர் வேறறஅ றுத்துக் கடம்பணியும்
வண்மைசேர் புயவீர னைக்கார்த்தி கைப்பெணார்
மஞ்சுதிகழ் மால்வரைபெ எத்தக்க கொங்கைநுகர்
வண்ணவா யுறுசேயை, விற்கோட்டு மற்செய்வார்
சென்றழும்வி னோதியர், இலக்கத்தின் ஒன்பதின்மர்
தென்னுலோ கனும்நா ணுறத்தாக்கும் வெற்றிதோய்
திண்பெறமுன் ஈபவனை, வித்தைத்தி றம்பெருகு
சென்னைமா நகர்வேல னைக்காத்த ளிக்கவே.
8நவக்கோள்கள்✓
சூரியன் திங்கள்அங் காரகன் புந்திகுரு
சுக்கிரன் சனிஇராகு
தொந்தமுறு கேதுகுளி கன்சிலை இராசிநாள்
தூமகே துபரி வேடம்
வீரியக் களரிகா வலன்முதற் பெரியோர்
விளம்புபல கோட்களுக்கும்
விரதாதி யுற்றுந் துதித்தும் தினந்தோறும்
மேன்மேலும் அஞ்சலிப்பாம்.
ஆரியம் அருந்தமிழ் முதற்பரவு கலைமுழுதும்
அறிபுல வணைக்,கிரி யெலாம்
ஆடரங்கா(ம்)முருக வேள்தனைத் தேவர்புகழ்
அயில்வே லனைக்குரத்தி
சீரிய முலைத்துணைக்(கு) உருகும்அதி மோகனைத்
தெய்வானை புணர்கேள்வனைச்
சென்னைமா நகரில்வரு கந்தசா மியைமிகச்
சிந்தித் தளிக்க என்றே.
9பலதேவர்✓
உயிரொன் றுழல வருத்தாமை
ஒருவர் தரும்ஊன் புசியாமை
ஓரம் சிறிதும் உரையாமை
உதவுந் தொழிலிற் சலியாமை
பயிலும் அறநூல் பழியாமை
பாழ்த்த முகத்தோ(டு) அலையாமை
பழகு மனத்தோர் தொழும்அளவில்
பலதே வரையும் பணிந்தெழுவாம்;
மயிலிற் பவனி வருவானை
வடிவே லணிந்த புயத்தானை
மலையா வினம்போய் நடிப்பானை
வணங்கு மவருக் கெளியானைக்
கயிலைக் கிரியார் தருமகவைக்
கழனி வளஞ்சேர் சென்னைநகர்க்
கந்தக் கடவுள் தனைநாளும்
காப்ப துமக்கே கடனென்றே.
ஒருமை
தனனதன தனனதன தனனதன தனனதன
தன்னதன தனனந்த தனனதன தத்தனா✓
அருளுததி யிடையுலக முழுதும்உத வியபொருளை
அன்னையென அவைதுன்றும் உயிர்வகை தமக்கெலாம்
அமுதுதவி விழிதுயில விடுமுதலை, வடவனலை
அன்னசின மொடுகொன்று மகிழ்வதனை, நுட்பமாம்
அறிவையறி வரியதிறை யிடுகொடுமை யுடையதனை
அம்மைவினை தவிர்வென்றி தருகுரவர் பற்பலோர்
அரசனென மிளிர்சுடரை உளசமய நியதிகளில்
அண்ணிஅகல் பெருவஞ்சம் மருவியதை, நம்பினோர்
✓
உருவமெனில் உருவும்,அரு வெனில்அருவும் நிகழ்வதனை,
உன்னுமனை தினும்ஒன்று செயலினதை முத்தர்தாம்
ஒருநொடியில் எளிதிலுணர் தரவுதவு முடிவை,அமு(து)
உண்ணுமிமையவர் சிந்தை யணுகரி யதைத்தொல்நூல்
உரையதனில் மருவிமரு விலதைஅமர் செயமுடுகும்
ஒன்னலரை அடுசிங்கம் அனையரைவெ றுத்திடா
உரிமையொடு நிலவியதை, அணுவிலணுவென நிறையும்
உண்மைவடி வெனநின்ற ஒருமையை, வழுத்துவாம்
✓
வருமமிகு தருவர்குலம் அழியவிடும் அயிலணியும்
மன்னவனை, அரனன்று வழிபடும் விதத்தினால்
மறைபலவும் நுவலும்உயர் பிரணவமென் ஒருபொறியில்
மன்னுபொரு ளினைவிண்ட வரதனைவி டப்பலால்
வலிமருவும் உரகபதி நெளியநட மிடுமயிலின்
வன்னம்அள வறவிஞ்சு கலபமயி லிற்பொனேர்
வனிதையர்கள் இருவரொடு நிகழ்குமர குருபரனை
வண்மையுறு பலகுன்றில் அமர்குகனை, அற்றைநாள்
10✓
செருமும்ஒலி யொடுகனலில் வருதகரில் இவர்வல
சின்னவனை, உயர்தென்றல் வரையினில்வ சிக்கும்ஓர்
சிறுமுனிவன் மயல்களையும் விழியினனை அருணகிரி
திண்ணமொடு பகர்செஞ்சொல் விழைபவனை மிக்கவேய்
செறியும்வன மதில்எனது கனவில்மிக உறுதிபகர்
தென்னவனை, அனம்வந்து வயல்களின்வ ரப்பிலே
தினம்அடையும் வளமருவி அமரர்உல கெனநிலவு
சென்னைநக ரினில்வந்த முருகனைஅ ளிக்கவே.