முருகன் App
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம்
வித்துவான் அம்பை சங்கரனார்
அண்டபகி ரண்டமும்2 / 11
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம் · வித்துவான் அம்பை சங்கரனார்

அண்டபகி ரண்டமும்

1✓
அண்டபகி ரண்டமும் உன்னாட்சி ஆனது
அதிலுமோர் ஐயமில்லை
ஆயினும் தென்பசிபிக் கடலினுள பிஜியை
ஆனந்த மாகக்கொண்டாய்
கண்டமாம் ஆத்திரே லியரையும் தென்அமெரிக்
காவினரை ஆளநினைவோ
கரும்புவளர் நாடதில் கருத்தாகக் கோயில் கொளும்
கவுரிகண் ணாம் கரும்பே!
கண்டத்தின் நீலமுன் தந்தையின் கருணையை
காசினியெங் கும் சாற்றுமே
கண்ணுதற் பரமனின் கண்ணாய் விளங்கியொளிர்
கண்மணி! கடம்ப! முருகா!
கண்டனைய பிஜியில் நந்திநகர்க் கோயிலுள
செல்வமுத் துக்குமரனே!
அடியவர்க் கருளுவான் அனைத்துலகும் அருள்மழையைப்
பொழியுமெம் முருகையனே.