முருகன் App
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம்
வித்துவான் அம்பை சங்கரனார்
உலகெலாம் தமிழார்தம்3 / 11
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம் · வித்துவான் அம்பை சங்கரனார்

உலகெலாம் தமிழார்தம்

2✓
உலகெலாம் தமிழார்தம் நாகரிகம் ஒருகாலத்
தோங்கி யிருந்த தென்பர்
உண்மையென நிறுவுவான் ஒளிமிகுநற் பிஜியில்
ஒளிர்கோயில் கொண்டிலகுவாய்
அலகிலா இன்னல்கள் யாம்பட்ட பாடிங்கு
அகிலலோ கமுமறியுமே
அருள்மிகுநின் கடைக்கண்ருள் அடியோமை ஆட்கொண்டு
ஆதரித் துளதுசத்தியம்
இலகுகடல் நடுவிலே குன்றுதோ றாடுபவன்
எளியோங்கட் காக இரங்கி
இரட்சிக்க வந்தநின் எளிமையை என்றும்நாம்
எண்ணியே நெஞ்சு நெகிழ்வோம்
திலகமென ஒளிர்நந்தி திருக்கோயில் கொண்டிலகும்
செல்வமுத் துக்குமரனே!
அடியவர்க் கருளுவான் அனைத்துலகும் அருள்மழையைப்
பொழியுமெம் முருகையனே.