முருகன் App
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம்
வித்துவான் அம்பை சங்கரனார்
யாவரும் போற்றுநல்9 / 11
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம் · வித்துவான் அம்பை சங்கரனார்

யாவரும் போற்றுநல்

8✓
யாவரும் போற்றுநல் களவியலுக் குயர்ந்த உரை
இஃதென உணர்த்தியவன்நீ
இருங்கந்த புராணத்தை என்றுமே நிற்கவே
ஒன்றுமே திருத்தியவன்நீ
பாவரும் புலவர்பலர் பல்லாண்டு காலமாய்ப்
பரவவும் மகிழ்ந்திட்டநீ
பாமரர் யாங்களும் பாடுமிப் பாட்டினை
பன்னிரு செவியிலொன்றின்
தேவரும் தேவியர்கள் அருளோடு கேட்டுமே
செவிகுளிர அருளொ ணாதோ?
இச்சையும் ஞானமும் செயலுமே மூன்றாக
இசைந்துள ஆற்றலென்பர்
ஆவரும் ஆற்றலுடன் அருள்பிஜி நந்திநகர்
செல்வமுத் துக்குமரனே!
அடியவர்க் கருளுவான் அனைத்துலகும் அருள்மழையைப்
பொழியுமெம் முருகையனே.