முருகன் App
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம்
வித்துவான் அம்பை சங்கரனார்
சத்தியின் றிச்சிவ8 / 11
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம் · வித்துவான் அம்பை சங்கரனார்

சத்தியின் றிச்சிவ

7✓
சத்தியின் றிச்சிவ மில்லைஎன் பதுதானும்
சாத்திர முடிபுமாகும்
அன்பின்றிச் சிவமுமே இல்லைஎன்பதுதானும்
அருள்மூலர் திருவாக்குமாம்
பத்தியின் பாலராய் உள்ளநம் தமிழரேம்
பரமனே உன்னையன்றி
பாவிக்க வெண்ணாற துண்மைநா டறியுமே
கடம்பைச் சந் நிதிமுறையைப்போல்
எத்திக்கும் போற்றுநல் எழில்முருகன் நற்றலம்
பாடல்கள் மெத்தஉண்டு
எளியேமுக் கருள்சுரந்து எங்கணும் விளங்கிடும்
எம்பிஜி நந்திமுருகா!
சித்திக்கு வித்தாய பிஜியில் நந்திநகர்
செல்வமுத் துக்குமரனே!
அடியவர்க் கருளுவான் அனைத்துலகும் அருள்மழையைப்
பொழியுமெம் முருகையனே