முருகன் App
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம்
வித்துவான் அம்பை சங்கரனார்
எங்குமே இறைவனி6 / 11
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம் · வித்துவான் அம்பை சங்கரனார்

எங்குமே இறைவனி

5✓
எங்குமே இறைவனி னிருப்பிடம் அவனன்றி
எதுவுமே நிகழ்வுறாது
பசுவிற்கு உடலெலாம் பால்நிறைந் திருக்கினும்
பால்மடியில் தான்சுரக்கும்
பொங்குமிவ் வுலகினில் போற்றுநல ஆன்றோர்கள்
பூரண அருள்பெறவுமே
பூரண! உன் ஆலயம் புவியினில் எடுத்தனர்
போற்றுதற் குரியதாகும்
நங்குலக் குமரனருள் நாடியே பிஜியரேம்
நற்கோயி லும்சமைத்தேம்
நம்பினர்க் கருள்சுரக் கும்குமர! நாயேமை
நற்கதிக் காளாக்குவாய்
மங்குல்நிறை பிஜியில் நந்திநகர் இலகிடும்
செல்வமுத் துக்குமரனே!
அடியவர்க் கருளுவான் அனைத்துலகும் அருள்மழையைப்
பொழியுமெம் முருகையனே!