முருகன் App
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம்
வித்துவான் அம்பை சங்கரனார்
ஒருதரம் சரவண7 / 11
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம் · வித்துவான் அம்பை சங்கரனார்

ஒருதரம் சரவண

6✓
ஒருதரம் சரவண பவாளனவும் ஓதினால்
ஓடிவரும் உந்தன்நிலையை
உளத்திலே கொண்டுமே உருகிடும் அடியரேம்
உளத்துன்பம் போக்கியருள்வாய்
கருதரிய உன்னுடைய பெருமையை உன்னியே
காசினியில் ஞானியர்பலர்
அருணைமா முனிவரரும் திருப்போரூர் அடிகளும்
அலகில்புகழ்ப் பாம்பனடியும்
பொருவரிய கவிதைஅஞ் சலியினால் உனதுபுகழ்
கனக்கவே அறியச் செய்தார்
ஏழையேம் எம்முடைய இருந்தமிழ் மாலையையும்
இதயத்தி லேற்றுமேநீ
மருவினிய பிஜியில் நந்திநகர் தன்னில்வளர்
செல்வமுத் துக்குமரனே!
அடியவர்க் கருளுவான் அனைத்துலகும் அருள்மழையைப்
பொழியுமெம் முருகையனே!