முருகன் App
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம்
வித்துவான் அம்பை சங்கரனார்
வகுத்தான் வகுத்தபடி11 / 11
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம் · வித்துவான் அம்பை சங்கரனார்

வகுத்தான் வகுத்தபடி

10✓
வகுத்தான் வகுத்தபடி வந்துந்தன் தாள் சேர்ந்தோம்
வாழ்விப்ப துன்பரங்காண்
ஆகமமுறைப்படி ஆன்றோர்கள் வாழ்த்துடன்
ஆலயமும் நன்குசமைத்தோம்
தொகுத்தபல் கோடியாம் உயிரையும் காத்துநீ
இரட்சிப்ப துந்தன்வசமே
தொண்டனேன் வாழ்வுக்கும் துணையாக இருந்துமே
கரையேற்று வாய்அறுமுகா!
மிகுந்தசெங் கருணையாய்! மேதினியின் மீதுவந்து
மிளிர்ந்தஉன் கடைக்கணோக்கு
பரவிடும் உயிர்களுக் கெல்லாமும் காட்டிநீ
பரகதியும் கூட்டுகந்தா!
தொகுத்தநல் பிஜியில் நந்திநகர் தன்னுளே
செல்வமுத் துக்குமரனே!
அடியவர்க் கருளுவான் அனைத்துலகும் அருள்மழையைப்
பொழியுமெம் முருகையனே