முருகன் App
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம்
வித்துவான் அம்பை சங்கரனார்
இறைவனீ னின்னருள்4 / 11
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம் · வித்துவான் அம்பை சங்கரனார்

இறைவனீ னின்னருள்

3✓
இறைவனீ னின்னருள் பத்தருக்கு நேராக
எப்போதும் வாய்த்ததில்லை
குருவினால் திருக்கோயில் மூர்த்தியால் அடியரிம்
மூவரா லன்றிநிகழா
நிறையன்பு அடியராம் அறுபத்து மூவருமிம்
மும்முறையுள் ஒன்றுபற்றி
முருகா!உன் அடியிணைகள் தஞ்சமென அடைந்திட்டார்
அறுமுகச் சிவனுநீயே!
குறைவிலா நிறைவாய குகசுப்பிர மணியனே!
குருவாயும் உபதேசித்தாய்
சாதுகுப்பு சாமியை பிஜிக் கனுப்பிநீ
சற்சனசங் கங்கூட்டினாய்
துறைபல்கு நந்திநகர் திருக்கோயில் கொண்டிலகும்
செல்வமுத் துக்குமரனே!
அடியவர்க் கருளுவான் அனைத்துலகும் அருள்மழையைப்
பொழியுமெம் முருகையனே.