முருகன் App
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம்
வித்துவான் அம்பை சங்கரனார்
தமிழ்தமிழென் றாலுமே5 / 11
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம் · வித்துவான் அம்பை சங்கரனார்

தமிழ்தமிழென் றாலுமே

4✓
தமிழ்தமிழென் றாலுமே அமிழ்துதான் ஊறிவிடும்
தண்ணளி இசைஇனிமையும்
புண்ணியப் பயனுமே போதரு மாதலால்
புவியுனோர் போற்றிமகிழ்வர்
இமிழ்கடல் வரைப்பினுள் பிஜித்தீவு தன்னிலே
இருந்தமிழ்க் கல்விநிலயம்
சிறப்பாக ஓங்கிநல் தமிழாம் அமுதினைச்
சிறார்பலரும் துய்க்கின்றனர்.
தமிழ்க்கல்விக் கழகமும் திருமுறை களும்நாளும்
சிறந்தோங்கி மிளிர்ந்திடவுமே
செந்தமிழ் முருகைய! சிறிதுமனம் வைத்தருள்
செந்திலம் பதிஅதியனே!
அமிழ்தெனக் கருப்பஞ்சாறு ஆறெனப்பாய் நந்தி
அழகமர்முத் துக்குமரனே!
அடியவர்க் கருளுவான் அனைத்துலகும் அருள்மழையைப்
பொழியுமெம முருகையனே!