முருகன் App
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம்
வித்துவான் அம்பை சங்கரனார்
என்றுமே குன்றின்மீ10 / 11
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம் · வித்துவான் அம்பை சங்கரனார்

என்றுமே குன்றின்மீ

9✓
என்றுமே குன்றின்மீ தமர்ந்துறையும் இறைவனீ
எளியோங்கட் காகவுந்தன்
பன்னியர்க ளிருவருடன் கடற்காற்றை ஏற்றுமே
பரம! நீ வருகைபுரிந்தாய்
குன்றமர்ந் துறையுமெம் முருகைய! நெய்தலைப்
பேணியது என்றும்மறவேம்
நந்திநகர் தன்னிலே துறுகலின் மீதுன்றன்
காட்சிஅள விடலொணாதே
துன்றுநா லாயிரங்கண் படைத்திலன் நான்முகன்
என்றுமுனர் ஓதியசொல்
உண்மையாய் விளங்குதே உன்னெழிற் காட்சிதனை
ஓதியும் முடிவொணாதே
நின்றநல் பிஜியின் நந்திநகர் தன்னிலே
செல்வமுத் துக்குமரனே!
அடியவர்க் கருளுவான் அனைத்துலகும் அருள்மழையைப்
மெம் முருகையனே.