முருகன் App
திரு அருட்பா
திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)
ஆறெழுத் துண்மை14 / 55
1முதல் திருமுறை: தெய்வமணி மாலை2கந்தர் சரணப்பத்து3திருத்தணிகைப் பதிகங்கள். பிரார்த்தனை மாலை4எண்ணப் பத்து5செழுஞ்சுடர் மாலை6குறைஇரந்த பத்து7ஜீவசாட்சி மாலை8ஆற்றா முறை9இரந்த விண்ணப்பம்10கருணை மாலை11மருண்மாலை விண்ணப்பம்12பொறுக்காப் பத்து13வேட்கை விண்ணப்பம்14ஆறெழுத் துண்மை15போக் குரையீடு16பணித்திறம் வேட்டல்17நெஞ்சொடு புலத்தல்18புன்மை நினைந் திரங்கல்19திருவடி சூட விழைதல்20ஆற்றா விரகம்21ஏழைமையின் இரங்கல்22பணித்திறஞ் சாலாப் பாடிழிவு23காணாப் பத்து24பணித்திறஞ் சாலாமை25குறை நேர்ந்த பத்து26முறையிட்ட பத்து27நெஞ்சவலங் கூறல்28ஆற்றாப் புலம்பல்29திருவருள் விழைதல்30புண்ணியநீற்று மான்மியம்31உறுதி உணர்த்தல்32எண்ணத் தேங்கல்33கையடை முட்டற் கிரங்கல்34அடியார் பணி அருளவேண்டல்35நாள் அவம்படாமை வேண்டல்36அன்பிற் பேதுறல்37கூடல் விழைதல்38தரிசனை வேட்கை39நாள் எண்ணி வருந்தல்40ஏத்தாப் பிறவி இழிவு41பவனிச் செருக்கு42திருவருள் விலாசப் பத்து43திருவருட் பேற்று விழைவு44செல்வச் சீர்த்தி மாலை45செவி அறிவுறுத்தல்46தேவ ஆசிரியம்47இங்கிதப் பத்து48போற்றித் திருவிருத்தம்49திருப்பள்ளித்தாமம் தாங்கல்50சண்முகர் கும்மி51சண்முகர் வருகை52தனித் திருத்தொடை53இரண்டாம் திருமுறை: அருள் நாம விளக்கம்54சிவசண்முகநாம சங்கீர்த்தன லகரி55மூன்றாம் திருமுறை: சிங்கபுரிக் கந்தர் பதிகம்
திரு அருட்பா · திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)

ஆறெழுத் துண்மை

1அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
பெருமை நிதியே மால்விடைகொள்
பெம்மான் வருந்திப் பெறும்பேறே
அருமை மணியே தணிகைமலை
அமுதே உன்றன் ஆறெழுத்தை
ஒருமை மனத்தின் உச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
இருமை வளனும் எய்தும்இடர்
என்ப தொன்றும் எய்தாதே. 1
2✓
எய்கற் கரிய அருட்சுடரே
எல்லாம் வல்ல இறையோனே
செய்தற் கரிய வளத்தணிகைத்
தேவே உன்றன் ஆறெழுத்தை
உய்தற் பொருட்டிங் குச்சரித்தே
உயர்ந்த திருவெண் ணீறிட்டால்
வைதற் கில்லாப் புகழ்ச்சிவரும்
வன்கண் ஒன்றும் வாராதே. 2
3✓
வாரா இருந்த அடியவர்தம்
மனத்தில் ஒளிரும் மாமணியே
ஆரா அமுதே தணிகைமலை
அரசே உன்றன் ஆறெழுத்தை
ஓரா மனத்தின் உச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
ஏரார் செல்வப் பெருக்கிகவா
இடும்பை ஒன்றும் இகந்திடுமே. 3
4✓
இகவா அடியர் மனத்தூறும்
இன்பச் சுவையே எம்மானே
அகவா மயில்ஊர் திருத்தணிகை
அரசே உன்றன் ஆறெழுத்தை
உகவா மனத்தின் உச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
சுகவாழ் வின்பம் அதுதுன்னும்
துன்பம் ஒன்றும் துன்னாதே. 4
5✓
துன்னும் மறையின் முடிவில்ஒளிர்
தூய விளக்கே சுகப்பெருக்கே
அன்னை அனையாய் தணிகைமலை
அண்ணா உன்றன் ஆறெழுத்தை
உன்னி மனத்தின் உச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
சென்னி அணியாய் அடிசேரும்
தீமை ஒன்றும் சேராதே. 5
6✓
சேரும் முக்கண் கனிகனிந்த
தேனே ஞானச் செழுமணியே
யாரும் புகழும் தணிகைஎம்
தன்பே உன்றன் ஆறெழுத்தை
ஓரும் மனத்தின் உச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
பாரும் விசும்பும் பதஞ்சாரும்
பழங்கண் ஒன்றும் சாராதே. 6
7✓
சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும்
தருமக் கடலே நற்பரமே
வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை
மணியே உன்றன் ஆறெழுத்தை
ஓர்ந்து மனத்தின் உச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
ஆர்ந்த ஞானம் உறும்அழியா
அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே. 7
8✓
அழியாப் பொருளே என்உயிரே
அயில்செங் கரங்கொள் ஐயாவே
கழியாப் புகழ்சேர் தணிகைஅமர்
கந்தா உன்றன் ஆறெழுத்தை
ஒழியா மனத்தின் உச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
பழியா இன்பம் அதுபதியும்
பனிமை ஒன்றும் பதியாதே. 8
9✓
பதியே எங்கும் நிறைந்துருளும்
பரம சுகமே பரஞ்சுடரே
கதியே அளிக்கும் தணிகைஅமர்
கடம்பா உன்றன் ஆறெழுத்தை
உதியேர் மனத்தின் உச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
துதிஏர் நினது பதந்தோன்றும்
துன்பம் ஒன்றும் தோன்றாதே. 9
10✓
தோன்றா ஞானச் சின்மயமே
தூய சுகமே சுயஞ்சுடரே
ஆன்றார் புகழும் தணிகைமலை
அரசே உன்றன் ஆறெழுத்தை
ஊன்றா மனத்தின் உச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
ஈன்றால் நிகரும் அருள்அடையும்
இடுக்கண் ஒன்றும் அடையாதே. 10