முருகன் App
திரு அருட்பா
திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)
மருண்மாலை விண்ணப்பம்11 / 55
1முதல் திருமுறை: தெய்வமணி மாலை2கந்தர் சரணப்பத்து3திருத்தணிகைப் பதிகங்கள். பிரார்த்தனை மாலை4எண்ணப் பத்து5செழுஞ்சுடர் மாலை6குறைஇரந்த பத்து7ஜீவசாட்சி மாலை8ஆற்றா முறை9இரந்த விண்ணப்பம்10கருணை மாலை11மருண்மாலை விண்ணப்பம்12பொறுக்காப் பத்து13வேட்கை விண்ணப்பம்14ஆறெழுத் துண்மை15போக் குரையீடு16பணித்திறம் வேட்டல்17நெஞ்சொடு புலத்தல்18புன்மை நினைந் திரங்கல்19திருவடி சூட விழைதல்20ஆற்றா விரகம்21ஏழைமையின் இரங்கல்22பணித்திறஞ் சாலாப் பாடிழிவு23காணாப் பத்து24பணித்திறஞ் சாலாமை25குறை நேர்ந்த பத்து26முறையிட்ட பத்து27நெஞ்சவலங் கூறல்28ஆற்றாப் புலம்பல்29திருவருள் விழைதல்30புண்ணியநீற்று மான்மியம்31உறுதி உணர்த்தல்32எண்ணத் தேங்கல்33கையடை முட்டற் கிரங்கல்34அடியார் பணி அருளவேண்டல்35நாள் அவம்படாமை வேண்டல்36அன்பிற் பேதுறல்37கூடல் விழைதல்38தரிசனை வேட்கை39நாள் எண்ணி வருந்தல்40ஏத்தாப் பிறவி இழிவு41பவனிச் செருக்கு42திருவருள் விலாசப் பத்து43திருவருட் பேற்று விழைவு44செல்வச் சீர்த்தி மாலை45செவி அறிவுறுத்தல்46தேவ ஆசிரியம்47இங்கிதப் பத்து48போற்றித் திருவிருத்தம்49திருப்பள்ளித்தாமம் தாங்கல்50சண்முகர் கும்மி51சண்முகர் வருகை52தனித் திருத்தொடை53இரண்டாம் திருமுறை: அருள் நாம விளக்கம்54சிவசண்முகநாம சங்கீர்த்தன லகரி55மூன்றாம் திருமுறை: சிங்கபுரிக் கந்தர் பதிகம்
திரு அருட்பா · திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)

மருண்மாலை விண்ணப்பம்

1அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
சொல்லும் பொருளு மாய்நிறைந்த
சுகமே அன்பர் துதிதுணையே
புல்லும் புகழ்சேர் நல்தணிகைப்
பொருப்பின் மருந்தே பூரணமே
அல்லும் பகலும் நின்நாமம்
அந்தோ நினைந்துன் ஆளாகேன்
கல்லும் பொருவா வன்மனத்தால்
கலங்கா நின்றேன் கடையேனே.
2✓
கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால்
கலூழ்கின் றேன்நின் திருக்கருணை
அடையேன் அவமே திரிகின்றேன்
அந்தோ சிறிதும் அறிவில்லேன்
விடையே றீசன் புயம்படும்உன்
விரைத்தாள் கமலம் பெறுவேனோ
கொடைஏர் அருளைத் தருமுகிலே
கோவே தணிகைக் குலமணியே.
3✓
மணியே அடியேன் கண்மணியே
மருந்தே அன்பர் மகிழ்ந்தணியும்
அணியே தணிகை அரசேதெள்
அமுதே என்றன் ஆருயிரே
பிணிஏய் துயரால் வருந்திமனப்
பேயால் அலைந்து பிறழ்கின்றேன்
தணியேன் தாகம் நின்அருளைத்
தருதல் இலையேல் தாழ்வேனே.
4✓
தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்பால்
சார்வேன் தனக்குன் அருள்தந்தால்
வாழ்வேன் இலையேல் என்செய்கேன்
வருத்தம் பொறுக்க மாட்டேனே
ஏழ்வே தனையும் கடந்தவர்தம்
இன்பப் பெருக்கே என்உயிரே
போழ்வேல் கரங்கொள் புண்ணியனே
புகழ்சேர் தணிகைப் பொருப்பரசே.
5✓
அரசே அடியர்க் கருள்குகனே
அண்ணா தணிகை ஐயாவே
விரைசேர் கடம்ப மலர்ப்புயனே
வேலா யுதக்கை மேலோனே
புரைசேர் மனத்தால் வருந்திஉன்றன்
பூம்பொற் பதத்தைப் புகழ்கில்லேன்
தரைசேர் வாழ்வில் தயங்குகின்றேன்
அந்தோ நின்று தனியேனே.
6✓
தனியே துயரில் வருந்திமனம்
சாம்பி வாழ்க்கைத் தளைப்பட்டிங்
கினிஏ துறுமோ என்செய்கேன்
என்றே நின்றேற் கிரங்காயோ
கனியே பாகே கரும்பேஎன்
கண்ணே தணிகைக் கற்பகமே
துனிஏய் பிறவி தனைஅகற்றும்
துணையே சோதிச் சுகக்குன்றே.
7✓
குன்றே மகிழ்ந்த குணக்குன்றே
கோவே தணிகைக் குருபரனே
நன்றே தெய்வ நாயகமே
நவிலற் கரிய நல்உறவே
என்றே வருவாய் அருள்தருவாய்
என்றே புலம்பி ஏங்குற்றேன்
இன்றே காணப் பெறில்எந்தாய்
இறவேன் பிறவேன் இருப்பேனே.
8✓
இருப்பேன் துயர்வாழ் வினில்எனினும்
எந்தாய் நினது பதங்காணும்
விருப்பேன் அயன்மால் முதலோரை
வேண்டேன் அருள வேண்டாயோ
திருப்பேர் ஒளியே அருட்கடலே
தெள்ளார் அமுதே திருத்தணிகைப்
பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே
புனித ஞான போதகமே.
9✓
போதா நந்த அருட்கனியே
புகலற் கரிய பொருளேஎன்
நாதா தணிகை மலைஅரசே
நல்லோர் புகழும் நாயகனே
ஓதா தவமே வருந்துயரால்
உழன்றே பிணியில் உலைகின்றேன்
ஏதாம் உனதின் அருள்தயா
திருந்தால் அந்தோ எளியேற்கே.
10✓
எளியேன் நினது திருவருளுக்
கெதிர்நோக் குற்றே இரங்குகின்ற
களியேன் எனைநீ கைவிட்டால்
கருணைக் கியல்போ கற்பகமே
அளியே தணிகை அருட்சுடரே
அடியர் உறவே அருள்ஞானத்
துளியே அமையும் எனக்கெந்தாய்
வாஎன் றொருசொல் சொல்லாயே.