முருகன் App
திரு அருட்பா
திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)
பணித்திறஞ் சாலாப் பாடிழிவு22 / 55
1முதல் திருமுறை: தெய்வமணி மாலை2கந்தர் சரணப்பத்து3திருத்தணிகைப் பதிகங்கள். பிரார்த்தனை மாலை4எண்ணப் பத்து5செழுஞ்சுடர் மாலை6குறைஇரந்த பத்து7ஜீவசாட்சி மாலை8ஆற்றா முறை9இரந்த விண்ணப்பம்10கருணை மாலை11மருண்மாலை விண்ணப்பம்12பொறுக்காப் பத்து13வேட்கை விண்ணப்பம்14ஆறெழுத் துண்மை15போக் குரையீடு16பணித்திறம் வேட்டல்17நெஞ்சொடு புலத்தல்18புன்மை நினைந் திரங்கல்19திருவடி சூட விழைதல்20ஆற்றா விரகம்21ஏழைமையின் இரங்கல்22பணித்திறஞ் சாலாப் பாடிழிவு23காணாப் பத்து24பணித்திறஞ் சாலாமை25குறை நேர்ந்த பத்து26முறையிட்ட பத்து27நெஞ்சவலங் கூறல்28ஆற்றாப் புலம்பல்29திருவருள் விழைதல்30புண்ணியநீற்று மான்மியம்31உறுதி உணர்த்தல்32எண்ணத் தேங்கல்33கையடை முட்டற் கிரங்கல்34அடியார் பணி அருளவேண்டல்35நாள் அவம்படாமை வேண்டல்36அன்பிற் பேதுறல்37கூடல் விழைதல்38தரிசனை வேட்கை39நாள் எண்ணி வருந்தல்40ஏத்தாப் பிறவி இழிவு41பவனிச் செருக்கு42திருவருள் விலாசப் பத்து43திருவருட் பேற்று விழைவு44செல்வச் சீர்த்தி மாலை45செவி அறிவுறுத்தல்46தேவ ஆசிரியம்47இங்கிதப் பத்து48போற்றித் திருவிருத்தம்49திருப்பள்ளித்தாமம் தாங்கல்50சண்முகர் கும்மி51சண்முகர் வருகை52தனித் திருத்தொடை53இரண்டாம் திருமுறை: அருள் நாம விளக்கம்54சிவசண்முகநாம சங்கீர்த்தன லகரி55மூன்றாம் திருமுறை: சிங்கபுரிக் கந்தர் பதிகம்
திரு அருட்பா · திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)

பணித்திறஞ் சாலாப் பாடிழிவு

1எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
அடுத்திலேன் நின்அடியர் அவைக்குட் சற்றும்
அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம்
தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத்
தரிசனம்செய் தேமதுரத் தமிழ்ச்சொல் மாலை
தொடுத்திலேன் அமுதுநின தருளை வேண்டித்
தொழுதுதொழு தானந்தத் தூய்நீர் ஆடேன்
எடுத்திலேன் நல்லன்எனும் பெயரை அந்தோ
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
2✓
திறப்படுவேன் மையல்புரி மாய வாழ்வில்
தியங்குவேன் சிறிதேனும் தெளிவொன் றில்லேன்
மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே
மங்கையர்தம் கண்களெனும் வலைக்குள் வீழ்வேன்
கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன்
கண்அனையாய் நின்தணிகை மலையைக் காணேன்
இரப்பவர்க்கோர் அணுஅளவும் ஈயேன் பேயேன்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
3✓
செய்திலேன் நின்தொண்டர் அடிக்குற் றேவல்
திருத்தணிகை மலையைவலஞ் செய்து கண்ணீர்ப்
பெய்திலேன் புலன்ஐந்தும் ஒடுக்கி வீதல்
பிறத்தல்எனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை
வைதிலேன் மலர்கொய்யேன் மாலை சூட்டேன்
மணியேநின் திருப்புகழை வழுத்தேன் நின்பால்
எய்திலேன் இவ்வுடல்கொண் டேழை யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே. 3
4✓
சீர்கொண்டார் புகழ்தணிகை மலையிற் சேரேன்
சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநின்
பேர்கொண்டார் தமைவணங்கி மகிழேன் பித்தேன்
பெற்றதே அமையும்எனப் பிறங்கேன் மாதர்
வார்கொண்டார் முலைமலைவீழ்ந் துருள்வேன் நாளும்
வஞ்சமே செய்திடுவேன் மதிஒன் றில்லேன்
ஏர்கொண்டார் இகழ்ந்திடஇங் கேழை யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே. 4
5✓
காமாந்த காரியாய் மாதர் அல்குல்
கடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
நாமாந்த கனைஉதைத்த நாதன் ஈன்ற
நாயகமா மணியேநல் நலமே உன்றன்
பூமாந்தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும்
பொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன்
ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே. 5
6✓
நன்றறியேன் தீங்கனைத்தும் பறியேன் பொல்லா
நங்கையர்தம் கண்மாய நவையைச் சற்றும்
வென்றறியேன் கொன்றறிவார் தம்மைக் கூடும்
வேடனேன் திருத்தணிகை வெற்பின் நின்பா
சென்றறியேன் இலையென்ப தறிவேன் ஒன்றும்
செய்தறியேன் சிவதருமம் செய்வோர் நல்லோர்
என்றறியேன் வெறியேன்இங் கந்தோ அந்தோ
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே. 6
7✓
அல்லார்க்கும் குழலார்மேல் ஆசை வைப்பேன்
ஐயாநின் திருத்தாள்மேல் அன்பு வையேன்
செல்லார்க்கும் பொழில்தணிகை எங்கே என்று
தேடிடேன் நின்புகழைச் சிந்தை செய்யேன்
கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்க ணேன்புன்
கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்
எல்லார்க்கும் பொல்லாத பாவி யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே. 7
8✓
அரும்பாய நகைமட வார்க் காளாய் வாளா
அலைகின்றேன் அறிவென்ப தறியேன் நின்பால்
திரும்பாத பாதகனேன் திருஒன் றில்லேன்
திருத்தணிகை மலைக்கேகச் சிந்தை செய்யேன்
கரும்பாய வெறுத்துவேம் பருந்தும் பொல்லாக்
காக்கைஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா
இரும்பாய வன்நெஞ்சக் கள்வ னென்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே. 8
9✓
அம்பாதல் நெடுங்கண்ணார்க் கிச்சை கொள்வேன்
அகமலர முகமலர்வோ டருள்செய் உன்றன்
செம்பாத மலர்ஏத்தேன் இலவு காத்தேன்
திருத்தணிகை யேநமது செல்வம் என்றே
நம்பாத கொடியேன்நல் லோரைக் கண்டால்
நாணிலேன் நடுங்கிலேன் நாயிற் பொல்லேன்
எம்பாத கத்தைஎடுத் தியார்க்குச் சொல்வேன்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே. 9
10✓
பண்ணேன்நின் புகழ்சொல்வோர் தமக்குப் பூசை
பாடேன்நின் திருச்சீரைப் பரமன் ஈன்ற
கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்
கைகுவியேன் மெய்குளிரேன் கண்ணீர் பாயேன்
உண்ணேன்நல் ஆனந்த அமுதை அன்பர்
உடன்ஆகேன் ஏகாந்தத் துறஓர் எண்ணம்
எண்ணேன்வன்துயர்மண்ணேன்மனஞ்செம்புண்ணேன்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே. 10