முருகன் App
திரு அருட்பா
திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)
இரந்த விண்ணப்பம்9 / 55
1முதல் திருமுறை: தெய்வமணி மாலை2கந்தர் சரணப்பத்து3திருத்தணிகைப் பதிகங்கள். பிரார்த்தனை மாலை4எண்ணப் பத்து5செழுஞ்சுடர் மாலை6குறைஇரந்த பத்து7ஜீவசாட்சி மாலை8ஆற்றா முறை9இரந்த விண்ணப்பம்10கருணை மாலை11மருண்மாலை விண்ணப்பம்12பொறுக்காப் பத்து13வேட்கை விண்ணப்பம்14ஆறெழுத் துண்மை15போக் குரையீடு16பணித்திறம் வேட்டல்17நெஞ்சொடு புலத்தல்18புன்மை நினைந் திரங்கல்19திருவடி சூட விழைதல்20ஆற்றா விரகம்21ஏழைமையின் இரங்கல்22பணித்திறஞ் சாலாப் பாடிழிவு23காணாப் பத்து24பணித்திறஞ் சாலாமை25குறை நேர்ந்த பத்து26முறையிட்ட பத்து27நெஞ்சவலங் கூறல்28ஆற்றாப் புலம்பல்29திருவருள் விழைதல்30புண்ணியநீற்று மான்மியம்31உறுதி உணர்த்தல்32எண்ணத் தேங்கல்33கையடை முட்டற் கிரங்கல்34அடியார் பணி அருளவேண்டல்35நாள் அவம்படாமை வேண்டல்36அன்பிற் பேதுறல்37கூடல் விழைதல்38தரிசனை வேட்கை39நாள் எண்ணி வருந்தல்40ஏத்தாப் பிறவி இழிவு41பவனிச் செருக்கு42திருவருள் விலாசப் பத்து43திருவருட் பேற்று விழைவு44செல்வச் சீர்த்தி மாலை45செவி அறிவுறுத்தல்46தேவ ஆசிரியம்47இங்கிதப் பத்து48போற்றித் திருவிருத்தம்49திருப்பள்ளித்தாமம் தாங்கல்50சண்முகர் கும்மி51சண்முகர் வருகை52தனித் திருத்தொடை53இரண்டாம் திருமுறை: அருள் நாம விளக்கம்54சிவசண்முகநாம சங்கீர்த்தன லகரி55மூன்றாம் திருமுறை: சிங்கபுரிக் கந்தர் பதிகம்
திரு அருட்பா · திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)

இரந்த விண்ணப்பம்

1அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
நாளை ஏகியே வணங்குதும்
எனத்தினம் நாளையே கழிக்கின்றோம்
ஊளை நெஞ்சமே என்னையோ
என்னையோ உயர்திருத் தணிகேசன்
தாளை உன்னியே வாழ்ந்திலம்
உயிர்உடல் தணந்திடல் தனைஇந்த
வேளை என்றறி வுற்றிலம்
என்செய்வோம் விளம்பரும் விடையோமே.
2✓
விடைய வாழ்க்கையை விரும்பினன்
நின்திரு விரைமலர்ப் பதம்போற்றேன்
கடைய நாயினேன் எவ்வணம்
நின்திருக் கருணைபெற் றுய்வேனே
விடையில் ஏறிய சிவபரஞ்
சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
தடையி லாதபேர் ஆனந்த
வெள்ளமே தணிகைஎம் பெருமானே.
3✓
பெருமை வேண்டிய பேதையில்
பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
ஒருமை ஈயும்நின் திருப்பதம்
இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
அருமை யாம்தவத் தம்மையம்
அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
தரும வள்ளலே குணப்பெருங்
குன்றமே தணிகைமா மலையானே.
4✓
மலையும் வேற்கணார் மையலில்
அழுந்தியே வள்ளல்நின் பதம்போற்றா
தலையும் இப்பெருங் குறையினை
ஐயகோ யாவரோ டுரைசெய்கேன்
நிலைகொள் ஆனந்த நிருத்தனுக்கு
கொருபொருள் நிகழ்த்திய பெருவாழ்வே
தலைமை மேவிய சற்குரு
நாதனே தணிகையம் பதியானே.
5✓
பதியும் அப்பனும் அன்னையும்
குருவும்நற் பயன்தரு பொருளாய
கதியும் நின்திருக் கழல்அடி
அல்லது கண்டிலன் எளியேனே
விதியும் மாலும்நின் றேத்திடும்
தெய்வமே விண்ணவர் பெருமானே
வதியும் சின்மய வடிவமே
தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே.
6✓
வாழும் நின்திருத் தொண்டர்கள்
திருப்பதம் வழுத்திடா துலகத்தே
தாழும் வஞ்சர்பால் தாழும்என்
தன்மைஎன் தன்மைவன் பிறப்பாய
ஏழும் என்னதே ஆகிய
தையனே எவர்எனைப் பொருகின்றோர்
ஊழும் நீக்குறும் தணிகைஎம்
அண்ணலே உயர்திரு வருள்தேனே.
7✓
தேனும் தெள்ளிய அமுதமும்
கைக்கும்தின் திருவருள் தேன்உண்டே
யானும் நீயுமாய்க் கலந்துற
வாழும்நாள் எந்தநாள் அறியேனே
வானும் பூமியும் வழுத்திடும்
தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே
கோனும் தற்பர குருவுமாய்
விளங்கிய குமாரசற் குணக்குன்றே.
8✓
குன்று பொய்உடல் வாழ்வினை
மெய்எனக் குறித்திவண் அலைகின்றேன்
இன்று நின்திரு வருள்அடைந்
துய்வனோ இல்லைஇவ் வுலகத்தே
என்றும் இப்படிப் பிறந்திறந்
துழல்வனோ யாதும்இங் கறிகில்லேன்
நன்று நின்திருச் சித்தம்என்
பாக்கியம் நல்தணி கையில்தேவே.
9✓
தேவ ரும்தவ முனிவரும்
சித்தரும் சிவன்அரி அயன்ஆகும்
மூவ ரும்பணி முதல்வநின்
அடியில்என் முடிஉற வைப்பாயேல்
ஏவ ரும்எனக் கெதிர்இலை
முத்திவீ டென்னுடை யதுகண்டாய்
தாவ ரும்பொழில் தணிகையம்
கடவுளே சரவண பவகோவே.
10✓
வேயை வென்றதோள் பாவையர்
படுகுழி விழுந்தலைந் திடும்இந்த
நாயை எப்படி ஆட்கொளல்
ஆயினும் நாதநின் செயல்அன்றே
தாயை அப்பனைத் தமரினை
விட்டுனைச் சார்ந்தவர்க் கருள்கின்றோய்
மாயை நீக்கிநல் அருள்புரி
தணிகைய வந்தருள் இந்நாளே.