முருகன் App
திரு அருட்பா
திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)
காணாப் பத்து23 / 55
1முதல் திருமுறை: தெய்வமணி மாலை2கந்தர் சரணப்பத்து3திருத்தணிகைப் பதிகங்கள். பிரார்த்தனை மாலை4எண்ணப் பத்து5செழுஞ்சுடர் மாலை6குறைஇரந்த பத்து7ஜீவசாட்சி மாலை8ஆற்றா முறை9இரந்த விண்ணப்பம்10கருணை மாலை11மருண்மாலை விண்ணப்பம்12பொறுக்காப் பத்து13வேட்கை விண்ணப்பம்14ஆறெழுத் துண்மை15போக் குரையீடு16பணித்திறம் வேட்டல்17நெஞ்சொடு புலத்தல்18புன்மை நினைந் திரங்கல்19திருவடி சூட விழைதல்20ஆற்றா விரகம்21ஏழைமையின் இரங்கல்22பணித்திறஞ் சாலாப் பாடிழிவு23காணாப் பத்து24பணித்திறஞ் சாலாமை25குறை நேர்ந்த பத்து26முறையிட்ட பத்து27நெஞ்சவலங் கூறல்28ஆற்றாப் புலம்பல்29திருவருள் விழைதல்30புண்ணியநீற்று மான்மியம்31உறுதி உணர்த்தல்32எண்ணத் தேங்கல்33கையடை முட்டற் கிரங்கல்34அடியார் பணி அருளவேண்டல்35நாள் அவம்படாமை வேண்டல்36அன்பிற் பேதுறல்37கூடல் விழைதல்38தரிசனை வேட்கை39நாள் எண்ணி வருந்தல்40ஏத்தாப் பிறவி இழிவு41பவனிச் செருக்கு42திருவருள் விலாசப் பத்து43திருவருட் பேற்று விழைவு44செல்வச் சீர்த்தி மாலை45செவி அறிவுறுத்தல்46தேவ ஆசிரியம்47இங்கிதப் பத்து48போற்றித் திருவிருத்தம்49திருப்பள்ளித்தாமம் தாங்கல்50சண்முகர் கும்மி51சண்முகர் வருகை52தனித் திருத்தொடை53இரண்டாம் திருமுறை: அருள் நாம விளக்கம்54சிவசண்முகநாம சங்கீர்த்தன லகரி55மூன்றாம் திருமுறை: சிங்கபுரிக் கந்தர் பதிகம்
திரு அருட்பா · திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)

காணாப் பத்து

1அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
வரங்கொள் அடியர் மனமலரில்
மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
திரங்கொள் தணிகை மலைவாழும்
செல்வப் பெருக்கே சிற்பரமே
தரங்கொள் உலக மயல்அகலத்
தாழ்ந்துள் உருக அழுதழுது
கரங்கொள் சிரத்தோ டியான்உன்னைக்
கண்கள் ஆரக் கண்டிலனே. 1
2✓
வல்லி ஒருபால் வானவர்தம்
மகளாண் டொருபால் வரமயில்மேல்
எல்லின் இலங்கு நெட்டிலைவேல்
ஏந்தி வரும்என் இறையவனே
சொல்லி அடங்காத் துயர்இயற்றும்
துகள்சேர் சனனப் பெருவேரைக்
கல்லி எறிந்து நின்உருவைக்
கண்கள் ஆரக் கண்டிலனே. 2
3✓
உருத்துள் இகலும் சூர்முதலை
ஒழித்து வானத் தொண்பதியைத்
திருத்தும் அரசே தென்தணிகைத்
தெய்வ மணியே சிவஞானம்
அருத்தும் நினது திருவருள்கொண்
டாடிப் பாடி அன்பதனால்
கருத்துள் உருகி நின்உருவைக்
கண்கள் ஆரக் கண்டிலனே. 3
4✓
போதல் இருத்தல் எனநினையாப்
புனிதர் சனனப் போரோடு
சாதல் அகற்றும் திருத்தணிகைச்
சைவக் கனியே தற்பரமே
ஓதல் அறியா வஞ்சகர்பால்
உழன்றே மாதர்க் குள்ளுருகும்
காதல் அகற்றி நின்உருவைக்
கண்கள் ஆரக் கண்டிலனே. 4
5✓
வீட்டைப் பெறுவோர் உள்அகத்து
விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
நாட்டை நலஞ்செய் திருத்தணிகை
நகத்தில அமர்ந்த நாயகமே
கேட்டைத் தருவஞ் சகஉலகில்
கிடைத்த மாய வாழ்க்கைஎனும்
காட்டைக் கடந்து நின்உருவைக்
கண்கள் ஆரக் கண்டிலனே. 5
6✓
மட்டித் தளறு படக்கடலை
மலைக்கும் கொடிய மாஉருவைச்
சட்டித் தருளும் தணிகையில்எந்
தாயே தமரே சற்குருவே
எட்டிக் கனியாம் இவ்வுலகத்
திடர்விட் டகல நின்பதத்தைக்
கட்டித் தழுவி நின்உருவைக்
கண்கள் ஆரக் கண்டிலனே. 6
7✓
இலக்கம் அறியா இருவினையால்
இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
விலக்கம் அடையா வஞ்சகர்பால்
வீணாட் போக்கி மேவிமனத்
தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில்
அலைந்தேன் தணிகை அரசேஅக்
கலக்கம் அகன்று நின்உருவைக்
கண்கள் ஆரக் கண்டிலனே. 7
8✓
விரைவாய் கடப்பந் தார்அணிந்து
விளங்கும் புயனே வேலோனே
தரைவாய் தவத்தால் தணிகைஅமர்
தருமக் கடலே தனிஅடியேன்
திரைவாய் சனனக் கடற்படிந்தே
தியங்கி அலைந்தேன் சிவஞானக்
கரைவாய் ஏறி நின்உருவைக்
கண்கள் ஆரக் கண்டிலனே. 8
9✓
பள்ள உலகப் படுகுழியில்
பரிந்தங் குழலா தானந்த
வெள்ளத் தழுந்தும் அன்பர்விழி
விருந்தே தணிகை வெற்பரசே
உள்ளம் அகல அங்கும்இங்கும்
ஓடி அலையும் வஞ்சநெஞ்சக்
கள்ளம் அகற்றி நின்உருவைக்
கண்கள் ஆரக் கண்டிலனே. 9
10✓
அடலை அணிந்தோர் புறங்காட்டில்
ஆடும் பெருமான் அளித்தருளும்
விடலை எனமூ வரும்புகழும்
வேலோய் தணிகை மேலோயே
நடலை உலக நடைஅளற்றை
நண்ணா தோங்கும் ஆனந்தக்
கடலை அடுத்து நின்உருவைக்
கண்கள் ஆரக் கண்டிலனே. 10