முருகன் App
திரு அருட்பா
திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)
திருப்பள்ளித்தாமம் தாங்கல்49 / 55
1முதல் திருமுறை: தெய்வமணி மாலை2கந்தர் சரணப்பத்து3திருத்தணிகைப் பதிகங்கள். பிரார்த்தனை மாலை4எண்ணப் பத்து5செழுஞ்சுடர் மாலை6குறைஇரந்த பத்து7ஜீவசாட்சி மாலை8ஆற்றா முறை9இரந்த விண்ணப்பம்10கருணை மாலை11மருண்மாலை விண்ணப்பம்12பொறுக்காப் பத்து13வேட்கை விண்ணப்பம்14ஆறெழுத் துண்மை15போக் குரையீடு16பணித்திறம் வேட்டல்17நெஞ்சொடு புலத்தல்18புன்மை நினைந் திரங்கல்19திருவடி சூட விழைதல்20ஆற்றா விரகம்21ஏழைமையின் இரங்கல்22பணித்திறஞ் சாலாப் பாடிழிவு23காணாப் பத்து24பணித்திறஞ் சாலாமை25குறை நேர்ந்த பத்து26முறையிட்ட பத்து27நெஞ்சவலங் கூறல்28ஆற்றாப் புலம்பல்29திருவருள் விழைதல்30புண்ணியநீற்று மான்மியம்31உறுதி உணர்த்தல்32எண்ணத் தேங்கல்33கையடை முட்டற் கிரங்கல்34அடியார் பணி அருளவேண்டல்35நாள் அவம்படாமை வேண்டல்36அன்பிற் பேதுறல்37கூடல் விழைதல்38தரிசனை வேட்கை39நாள் எண்ணி வருந்தல்40ஏத்தாப் பிறவி இழிவு41பவனிச் செருக்கு42திருவருள் விலாசப் பத்து43திருவருட் பேற்று விழைவு44செல்வச் சீர்த்தி மாலை45செவி அறிவுறுத்தல்46தேவ ஆசிரியம்47இங்கிதப் பத்து48போற்றித் திருவிருத்தம்49திருப்பள்ளித்தாமம் தாங்கல்50சண்முகர் கும்மி51சண்முகர் வருகை52தனித் திருத்தொடை53இரண்டாம் திருமுறை: அருள் நாம விளக்கம்54சிவசண்முகநாம சங்கீர்த்தன லகரி55மூன்றாம் திருமுறை: சிங்கபுரிக் கந்தர் பதிகம்
திரு அருட்பா · திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)

திருப்பள்ளித்தாமம் தாங்கல்

1அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
வெம்பு முயிருக் கோருறவாய்
வேளை நமனும் வருவானேல்
தம்பி தமையன் துணையாமோ
தனையர் மனைவி வருவாரோ
உம்பர் பரவுந் திருத்தணிகை
உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
தும்பைக் குடலை எடுக்காமல்
துக்க வுடலை எடுத்தேனே.
2✓
தொல்லைக் குடும்பத் துயரதனில்
தொலைத்தே னந்தோ காலமெலாம்
அல்ல லகற்றிப் பெரியோரை
யடுத்து மறியேன் அரும்பாவி
செல்லத் தணிகைத் திருமலைவாழ்
தேவா உன்றன் சந்நிதிக்கு
வில்வக் குடலை எடுக்காமல்
வீணுக் குடலை எடுத்தேனே.
3✓
அவல வயிற்றை வளர்ப்பதற்கே
அல்லும் பகலும் அதினினைவாய்க்
கவலைப் படுவ தன்றிசிவ
கனியைச் சேரக் கருதுகிலேன்
திவலை யொழிக்குந் திருத்தணிகைத்
திருமால் மருகன் திருத்தாட்குக்
குவளைக் குடலை எடுக்காமற்
கொழுத்த வுடலை எடுத்தேனே.