முருகன் App
திரு அருட்பா
திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)
போக் குரையீடு15 / 55
1முதல் திருமுறை: தெய்வமணி மாலை2கந்தர் சரணப்பத்து3திருத்தணிகைப் பதிகங்கள். பிரார்த்தனை மாலை4எண்ணப் பத்து5செழுஞ்சுடர் மாலை6குறைஇரந்த பத்து7ஜீவசாட்சி மாலை8ஆற்றா முறை9இரந்த விண்ணப்பம்10கருணை மாலை11மருண்மாலை விண்ணப்பம்12பொறுக்காப் பத்து13வேட்கை விண்ணப்பம்14ஆறெழுத் துண்மை15போக் குரையீடு16பணித்திறம் வேட்டல்17நெஞ்சொடு புலத்தல்18புன்மை நினைந் திரங்கல்19திருவடி சூட விழைதல்20ஆற்றா விரகம்21ஏழைமையின் இரங்கல்22பணித்திறஞ் சாலாப் பாடிழிவு23காணாப் பத்து24பணித்திறஞ் சாலாமை25குறை நேர்ந்த பத்து26முறையிட்ட பத்து27நெஞ்சவலங் கூறல்28ஆற்றாப் புலம்பல்29திருவருள் விழைதல்30புண்ணியநீற்று மான்மியம்31உறுதி உணர்த்தல்32எண்ணத் தேங்கல்33கையடை முட்டற் கிரங்கல்34அடியார் பணி அருளவேண்டல்35நாள் அவம்படாமை வேண்டல்36அன்பிற் பேதுறல்37கூடல் விழைதல்38தரிசனை வேட்கை39நாள் எண்ணி வருந்தல்40ஏத்தாப் பிறவி இழிவு41பவனிச் செருக்கு42திருவருள் விலாசப் பத்து43திருவருட் பேற்று விழைவு44செல்வச் சீர்த்தி மாலை45செவி அறிவுறுத்தல்46தேவ ஆசிரியம்47இங்கிதப் பத்து48போற்றித் திருவிருத்தம்49திருப்பள்ளித்தாமம் தாங்கல்50சண்முகர் கும்மி51சண்முகர் வருகை52தனித் திருத்தொடை53இரண்டாம் திருமுறை: அருள் நாம விளக்கம்54சிவசண்முகநாம சங்கீர்த்தன லகரி55மூன்றாம் திருமுறை: சிங்கபுரிக் கந்தர் பதிகம்
திரு அருட்பா · திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)

போக் குரையீடு

1அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
கற்கி லேன்உன தருட்பெயர்
ஆம்குக கந்தஎன் பவைநாளும்
நிற்கி லேன்உன தாகம
நெறிதனில் நீசனேன் உய்வேனோ
சொற்கி லேசமில் அடியவர்
அன்பினுள் தோய்தரு பசுந்தேனே
அற்கி லேர்தரும் தணிகைஆர்
அமுதமே ஆனந்த அருட்குன்றே. 1
2✓
பாவ வாழ்க்கையில் பாவியேன்
செய்திடும் பண்பிலாப் பிழைநோக்கித்
தேவ ரீர்மன திரக்கமுற்
றேஅருள் செய்திடா திருப்பீரேல்
காவ லாகிய கடும்பிணித்
துயரம்இக் கடையனேன் தனக்கின்னும்
யாவ தாகுமோ என்செய்கோ
என்செய்கோ இயலும்வேல் கரத்தீரே. 2
3✓
சேவி யாதஎன் பிழைகளை
என்னுளே சிறிதறி தரும்போதோ
பாவி யேன்மனம் பகீரென
வெதும்பியுள் பதைத்திடக் காண்கின்றேன்
ஆவி யேஅருள் அமுதமே
நின்திரு வருள்தனக் கென்னாமோ
பூவில் நாயகன் போற்றிடும்
தணிகையம் பொருப்பமர்ந் திடுவாழ்வே. 3
4✓
துன்பி னால்அகம் வெதும்பிநைந்
தயர்ந்துநின் துணைஅடி மலர்ஏத்தும்
அன்பி லாதஇப் பாவியேன்
செய்பிழை அனைத்தையும் பொறுப்பாயேல்
வன்பி லாதநின் அடியவர்
தம்திரு மனத்தினுக் கென்னாமோ
இன்பி னால்சுரர் போற்றிடும்
தணிகைவாழ் இறைவனே எம்மானே. 4
5✓
என்செய் கேன்இனும் திருவருள்
காண்கிலேன் எடுக்கரும் துயர்உண்டேன்
கன்செய் பேய்மனக் கடையனேன்
என்னினும் காப்பதுன் கடன்அன்றோ
பொன்செய் குன்றமே பூரண
ஞானமே புராதனப் பொருள்வைப்பே
மன்செய் மாணிக்க விளக்கமே
தணிகைவாழ் வள்ளலே மயிலோனே. 5
6✓
மண்ணில் நண்ணிய வஞ்சகர்
பால்கொடு வயிற்றினால் அலைப்பட்டேன்
கண்ணில் நண்ணரும் காட்சியே
நின்திருக் கடைக்கண்ணோக் கருள்நோக்கி
எண்ணி எண்ணிநெஞ் சுழிந்துகண்
ணீர்கொளும் ஏழையேன் தனக்கின்னும்
புண்ணில் நண்ணிய வேல்எனத்
துயர்உறில் புலையன்என் செய்கேனே.
7✓
மலங்கி வஞ்சகர் மாட்டிரந்
தையகோ வருந்திநெஞ் சயர்வுற்றே
கலங்கி நின்திருக் கருணையை
விழையும்என் கண்அருள் செய்யாயோ
இலங்கி எங்கணும் நிறைந்தருள்
இன்பமே எந்தையே எந்தாயே
நலங்கி ளர்ந்திடும் தணிகையம்
பதியமர் நாயக மணிக்குன்றே.
8✓
சைவ நாயக சம்பந்தன்
ஆகிய தமிழ்அருட் குன்றேஎன்
தெய்வ மேநினை அன்றிஓர்
துணையிலேன் திருவருள் அறியாதோ
வைவ தேகொளும் வஞ்சகர்
தம்இடை வருந்திநெஞ் சுழிகின்றேன்
செய்வ தோர்கிலேன் கைவிடில்
என்செய்கேன் தெளிவிலாச் சிறியேனே.
9✓
வாழ்வில் ஆம்சிறு களிப்பினால்
உன்றனை மறந்துறு மாக்கின்றேன்
தாழ்வி லேசிறி தெண்ணிநொந்
தயர்வன்என் தன்மைநன் றருள்ஆளா
கேழ்வி மேவிய அடியவர்
மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே
வேழ்வி ஓங்கிய தணிகைமா
மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே.
10✓
என்றும் மாதர்மேல் இச்சைவைத்
துன்றனை எண்ணுவேன் துயருற்றால்
கன்று நெஞ்சகக் கள்வனேன்
அன்பினைக் கருத்திடை எனில்சால
நன்று நன்றெனக் கெவ்வணம்
பொன்அருள் நல்குவை அறிகில்லேன்
துன்று மாதவர் போற்றிடும்
தணிகைவாழ் சோதியே சுகவாழ்வே.