முருகன் App
திரு அருட்பா
திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)
மூன்றாம் திருமுறை: சிங்கபுரிக் கந்தர் பதிகம்55 / 55
1முதல் திருமுறை: தெய்வமணி மாலை2கந்தர் சரணப்பத்து3திருத்தணிகைப் பதிகங்கள். பிரார்த்தனை மாலை4எண்ணப் பத்து5செழுஞ்சுடர் மாலை6குறைஇரந்த பத்து7ஜீவசாட்சி மாலை8ஆற்றா முறை9இரந்த விண்ணப்பம்10கருணை மாலை11மருண்மாலை விண்ணப்பம்12பொறுக்காப் பத்து13வேட்கை விண்ணப்பம்14ஆறெழுத் துண்மை15போக் குரையீடு16பணித்திறம் வேட்டல்17நெஞ்சொடு புலத்தல்18புன்மை நினைந் திரங்கல்19திருவடி சூட விழைதல்20ஆற்றா விரகம்21ஏழைமையின் இரங்கல்22பணித்திறஞ் சாலாப் பாடிழிவு23காணாப் பத்து24பணித்திறஞ் சாலாமை25குறை நேர்ந்த பத்து26முறையிட்ட பத்து27நெஞ்சவலங் கூறல்28ஆற்றாப் புலம்பல்29திருவருள் விழைதல்30புண்ணியநீற்று மான்மியம்31உறுதி உணர்த்தல்32எண்ணத் தேங்கல்33கையடை முட்டற் கிரங்கல்34அடியார் பணி அருளவேண்டல்35நாள் அவம்படாமை வேண்டல்36அன்பிற் பேதுறல்37கூடல் விழைதல்38தரிசனை வேட்கை39நாள் எண்ணி வருந்தல்40ஏத்தாப் பிறவி இழிவு41பவனிச் செருக்கு42திருவருள் விலாசப் பத்து43திருவருட் பேற்று விழைவு44செல்வச் சீர்த்தி மாலை45செவி அறிவுறுத்தல்46தேவ ஆசிரியம்47இங்கிதப் பத்து48போற்றித் திருவிருத்தம்49திருப்பள்ளித்தாமம் தாங்கல்50சண்முகர் கும்மி51சண்முகர் வருகை52தனித் திருத்தொடை53இரண்டாம் திருமுறை: அருள் நாம விளக்கம்54சிவசண்முகநாம சங்கீர்த்தன லகரி55மூன்றாம் திருமுறை: சிங்கபுரிக் கந்தர் பதிகம்
திரு அருட்பா · திருவருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்)

மூன்றாம் திருமுறை: சிங்கபுரிக் கந்தர் பதிகம்

காப்பு நேரிசை வெண்பா✓
பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச்-சின்மயத்தின்
மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
பொய்யகலப் போற்றுவம்இப் போது.
1அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
சீராரும் மறையொழுக்கந் தவிராது
நான்மரபு சிறக்க வாழும்
ஏராரும் நிதிபதிஇந் தீரன்புரமும்
மிகநாணும் எழிலின் மிக்க
வாராருங் கொங்கையர்கள் மணவாளர்
உடன்கூடி வாழ்த்த நாளும்
தேராரும் நெடுவீதிச் சிங்கபுரி
தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
2✓
உம்பர்துயர் கயிலைஅரற் கோதிடவே
அப்பொழுதே உவந்து நாதன்
தம்பொருவில் முகமாறு கொண்டுநுதல்
ஈன்றபொறி சரவ ணத்தில்
நம்புமவர் உயவிடுத்து வந்தருளும்
நம்குகனே நலிவு தீர்ப்பாய்
திங்கள்தவழ் மதில்சூழும் சிங்கபுரி
தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
3✓
பொல்லாத சூர்க்கிளையைத் தடிந்தமரர்
படுந்துயரப் புன்மை நீக்கும்
வல்லானே எனதுபிணி நீநினைந்தால்
ஒருகணத்தில் மாறி டாதோ
கல்லாதேன் எனினும்எனை இகழாதே
நினதடியார் கழகங் கூட்டாய்
செல்லாதார் வலிஅடக்கும் சிங்கபுரி
தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
4✓
பண்டுறுசங் கப்புலவர் அருஞ்சிறையைத்
தவிர்த்தருளும் பகவ னேஎன்
புண்தருஇந் நோய்தணிக்கப் புரையிலியோய்
யான்செய்யும் புன்மை தானோ
தண்டைஎழில் கிண்கிணிசேர் சரணமலர்க்
கனுதினமும் தமியேன் அன்பாய்த்
தெண்டனிடச் செய்தருள்வாய் சிங்கபுரி
தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
5✓
தாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர்
கரமளித்த சதுரன் அன்றே
மூவாத மறைபுகலும் மொழிகேட்டுன்
முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து
தேவாதி தேவன்எனப் பலராலுந்
துதிபுரிந்து சிறப்பின் மிக்க
தீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி
தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
6✓
வானவர்கோன் மேனாளில் தரமறியா
திகழ்ந்துவிட விரைவில் சென்று
மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த
கொடுமைதனை மாற்றும் எங்கள்
தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே
இப்பிணியைத் தணிப்பாய் வாசத்
தேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி
தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
7✓
மட்டாரும் பொழில்சேரும் பரங்கிரிசெந்
தூர்பழனி மருவு சாமி
நட்டாரும் பணிபுரியும் ஆறுதலை
மலைமுதலாய் நணுகி எங்கள்
ஒட்டாதார் வலிஅடக்கி அன்பர்துதி
ஏற்றருளும் ஒருவ காவாய்
தெட்டாதார்க் கருள்புரியும் சிங்கபுரி
தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
8✓
முன்செய்த மாதவத்தால் அருணகிரி
நாதர்முன்னே முறையிட் டேத்தும்
புன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும்
மெய்ஞ்ஞானப் புனிதன் என்றே
என்செயலில் இரவுபகல் ஒழியாமல்
போற்றியிட இரங்கா தென்னே
தென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி
தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
9✓
விண்ணவர்கோன் அருந்துயர நீங்கிடவும்
மாதுதவ விளைவு நல்கும்
கண்ணகன்ற பேரருளின் கருணையினால்
குஞ்சரியைக் காத லோடு
மண்ணுலகோர் முதல்உயிர்கள் மகிழ்ந்திடவும்
மணம்புரிந்த வள்ள லேஎன்
திண்ணியதீ வினைஒழிப்பாய் சிங்கபுரி
தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
10✓
மாசகன்ற சிவமுனிவர் அருளாலே
மானிடமாய் வந்த மாதின்
ஆசில்தவப் பேரளிக்க வள்ளிமலை
தனைச்சார்ந்தே அங்குக் கூடி
நேசமிகு மணம்புரிந்த நின்மலனே
சிறியேனை நீயே காப்பாய்
தேசுலவு பொழில்சூழும் சிங்கபுரி
தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.