முருகன் App
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம்
வெ.சா. ஏகாம்பரம் புலவர்
அருங்கனி பெற்றிட4 / 11
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம் · வெ.சா. ஏகாம்பரம் புலவர்

அருங்கனி பெற்றிட

4✓
அருங்கனி பெற்றிட மஞ்ஞைமே லவனியை
அரைநொடியில் சுற்றி வந்தாய்
ஐங்கர னக்கனி பெற்றிட வெகுண்டுநீ
ஆவினன் குடிய டைந்தாய்
செருக்கள மமைத்துநற் செந்திலம் பதியில்சூர்
சேனையை அழித்தொ ழித்தாய்
தேவர்கள் விண்ணின்று பூமாரி பெய்தனர்
தேவர்கோ னுளம கிழ்ந்து
திருமணஞ் செய்விக்க தெய்வ யானையொடு
திருப்பரங் குன்றில் நின்றாய்
திருமகட் செல்வியாம் வள்ளியை மணந்துபின்
திருத்தணிகை வந்த மர்ந்தாய்
அருணகிரி வாயாற் புகழ்ந்திடும் பெருமைசேர்
ஆறுபடை வீடு கொண்டாய்
அடியவர் தொழுதிட மாடமா மயிலையும்
அமர்ந்தசிங் கார வேளே.