முருகன் App
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம்
வெ.சா. ஏகாம்பரம் புலவர்
மறவாத கல்வியும்7 / 11
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம் · வெ.சா. ஏகாம்பரம் புலவர்

மறவாத கல்வியும்

7✓
மறவாத கல்வியும் மனைமக்கள் மாட்சியும்
மற்றுஞ்சுக போக முண்டு
வற்றாத செல்வமும் ஈகையும் வாய்மையும்
மாறா திருப்ப துண்டு
பிறவாத தன்மையும் பிணிமூப்பு சாக்காடு
பெற்றிடா நிலையு முண்டு
பிரியா(து) அடியவர் கூட்டம் நிலைத்திடும்
பேறது வாய்ப்ப துண்டு
குறமகள் நாதனை மாடமா மயிலையுள்
கோயில்குடி கொண்ட வேளை
கொண்டாடி வலம்வந்து கூத்தாடிப் பாடிகை
கூப்பினாற் பெறற்க ரியதோர்
இறவாத புகழுந் திருவருட் பேறும்
இம்மையே வாய்ப்ப துண்டு
எழிலான கந்தனே பார்வதி மைந்தனே
ஈடில்சிங் கார வேளே.