முருகன் App
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம்
வெ.சா. ஏகாம்பரம் புலவர்
கலைகள் பலவுங்கற்று8 / 11
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம் · வெ.சா. ஏகாம்பரம் புலவர்

கலைகள் பலவுங்கற்று

8✓
கலைகள் பலவுங்கற்று காசினி புகழ்ந்திடக்
கருதினால் கலைய ரசியாம்
கலைமகள் வணங்கிடு, கனதனம் வேண்டில்செங்
கமலத்தில் வீற்றி ருக்கும்
அலைமகள் வணங்கிடு, அகத்தினில் அமைதியும்
அறிவொடு வீரம் வேண்டில்
அரனிடப் பாகத்தை யாட்கொண்ட வல்லியை
ஆதி பராசக் தியாம்
மலைமகட் பொன்னடி வணங்கிடு; இம்மைக்கும்
மறுமைக்கும் வாழ்வ ளிக்கும்
மயிலேறு முருகனை வணங்கிடில் இவையுடன்
பதமுக்தி யும்பெ றுகுவாய்
மலைமீது குடிகொண்ட முருகனே மாடமா
மயிலையில் அமர்ந்த வேளே
வள்ளிதெய்வ யானையைப் போற்றிடு மடியர்க்கு
வரந்தருசிங் கார வேளே.