முருகன் App
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம்
வெ.சா. ஏகாம்பரம் புலவர்
கஞ்சனைச் சிறைவைத்து10 / 11
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம் · வெ.சா. ஏகாம்பரம் புலவர்

கஞ்சனைச் சிறைவைத்து

10✓
கஞ்சனைச் சிறைவைத்து சிவபிரான் காதில்‘ஓம்’
கருத்தினை யெடுத்து ரைத்தாய்
கற்கிமுகி பூதம்நக் கீரரைச் சிறைவைக்க
கல்லைப் பிளந்து காத்தாய்
வெஞ்சமர் விளைத்திடச் சூரனை மெய்ஞ்ஞான
வேலினா லேபி ளந்து
விண்ணோங்கு சேவற் பதாகையாய், மயிலாய்
வைத்தருள் செய்த வேலா
தஞ்சமென் றடைந்திடும் அடியரைக் காத்திடச்
சரணார விந்தந் தன்னைத்
தலையினிற் சூட்டியும் நயனங்கள் நோக்கியும்
தண்ணளி புரியும் வேளே
மஞ்சுதவழ் சோலைசூழ் மாடமா மயிலையில்
வந்துகுடி கொண்ட வேளே
வள்ளிதெய்வ யானையைப் போற்றிடு மடியார்க்கு
வாழ்வருள்சிங் கார வேளே.