முருகன் App
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம்
வெ.சா. ஏகாம்பரம் புலவர்
ஒருமுறை ‘சரவண11 / 11
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம் · வெ.சா. ஏகாம்பரம் புலவர்

ஒருமுறை ‘சரவண

11✓
ஒருமுறை ‘சரவண பவ’வென் றுரைத்திடில்
உன்பவ மொழிந்து போகும்
உன்னையறி, யாதுதொடர் பாவமொ ழிந்திடும்
ஒருமுறை ‘முருகா’ வென்னில்
ஒருதரம் ‘குமரா நம’வெனக் கூறிடில்
ஒருகோடி புண்ய முண்டு
உலகவர் போற்றிடும் பெரும்புகழ் தந்திடும்
ஒருமு றைகுகா வென்றிடின்
அருமறை முழங்கிடும் மயிலையுள் கற்பக
வம்மையின் அருகி ருந்துள்
ளன்புடன் பூசிக்கு மடியவர் துயர்கெட
ஆலயங் குடிபு குந்தாய்
வருத்திடும் பிணிநீக்கும் வயித்திய நாதனே
மயிலே றும்மா ணிக்கமே
மங்கைய ரிருவரொடு வந்துனது அடியர்க்கு
வரந்தருசிங் கார வேளே.