முருகன் App
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம்
வெ.சா. ஏகாம்பரம் புலவர்
சரவணன் தாள்தலை9 / 11
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம் · வெ.சா. ஏகாம்பரம் புலவர்

சரவணன் தாள்தலை

✓
சரவணன் தாள்தலை தாழ்த்திடில் தீவினை
சாராது சேய்மை செல்லும்
சஞ்சித மழிந்திடும் நின்றிடு மாகாம்யம்
சாம்பலாய்ப் போகு மன்றே
சரமொக்கும் நயனங்கொள் முருகனைத் தரிசிக்கில்
சாக்காடு மற்றுப் போகும்
சாலவு மவன்புகழ் செவிகளிற் கேட்டிடச்
சென்ம மழிந்து போகும்
கரங்களாற் கூப்பிநங் கந்தனை வணங்கிடிற்
கவலைக ளற்றுப் போகும்
கால்களால் வலம்வந்து முருகனைப் பணிந்திடிற்
கருதியது முடியு மன்றே
வரந்தரும் மாடமா மயிலை யமர்ந்தவனை
வாயினாற் பாடி வந்தால்
வள்ளி தெய்வ யானையொடு மயின்மீது
வந்தருள்சிங் கார வேளே.