முருகன் App
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம்
வெ.சா. ஏகாம்பரம் புலவர்
முன்னம் ஒருநாள்முரு6 / 11
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம் · வெ.சா. ஏகாம்பரம் புலவர்

முன்னம் ஒருநாள்முரு

6✓
முன்னம் ஒருநாள்முரு கம்மையார் பிச்சியாய்
முருகனை விளித்த காலை
முனிந்தவள் கணவனார் கைகளைத் துண்டிக்க
முடமான கைகள் தூக்கி
சென்னிமேல் கூப்பிட முன்போற் றிகழ்ந்தது
செந்திலோன் செய்கை யன்றோ!
தினமுனைப் பாடிடும் குருதாசர் முரிந்தகால்
செம்மை செய்ததும் வேலனே
உன்னையே தொழுதிடும் அடியவர்க் கஞ்சலென்
றோடிவந் துதவி செய்வாய்
ஒறுத்திடும் நமன்வருங் காலையில் தண்டித்(து)
உன்னடி அணைத்துக் கொள்வாய்
செந்நெல் வயல்சூழ் தொண்டை நாட்டினைச்
சேர்ந்த மயிலா புரியில்
திருவடி பணிந்திடும் அடியவர்க் கருட்செயுஞ்
சிங்கா ரவடி வேலனே.