முருகன் App
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம்
வெ.சா. ஏகாம்பரம் புலவர்
நிலவளஞ் செறிந்திடக்2 / 11
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம் · வெ.சா. ஏகாம்பரம் புலவர்

நிலவளஞ் செறிந்திடக்

2✓
நிலவளஞ் செறிந்திடக் கன்னலொடு செந்நெல்
நெற்குவை இல்லம் நிரப்பும்
நிலமகள் விழைந்திடுந் தொண்டைநன் நாட்டிற்
சீர்மிகு வேளாண் குடியில்
நலந்தருஞ் சிவப்பயிர் தழைக்க புன்சமயங்கள்
நலியவேர் களையெ டுத்த
நால்வரோ டடியவர் சரிதையைக் கூறியிந்
நானிலம் உய்ய வைத்தார்
பலர்புகழ் ஞாயிறு போன்றநம் சேக்கிழார்
நெறியினில் வழாஅது நிற்கும்
பண்புடை யாளர்கள் வாழ்கின்ற மாடமா
மயிலையில் வந்த மர்ந்தாய்
வலக்கரம் மான்மகள் இடக்கரம் வான்மகள்
மகிழ்கின்ற கந்த வேளே
வந்துனைப் பணிபவர் மனக்குறை நீக்கிடும்
வள்ளல் சிங்கார வேளே.