முருகன் App
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம்
வெ.சா. ஏகாம்பரம் புலவர்
தண்மதி நிகர்க்குநின்5 / 11
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம் · வெ.சா. ஏகாம்பரம் புலவர்

தண்மதி நிகர்க்குநின்

5✓
தண்மதி நிகர்க்குநின் வதனங்க ளாறும்
சராசரங் களுந்த ழைக்க
சகலபுவ னங்களில் வாழ்கின்ற உயிர்களைத்
தன்குடைக் கீழ்நி றுத்தும்
தண்ணளி சுரக்குநின் ஈராறு கண்களுந்
தன்னடி யார்க ளிக்க
தறுகணொன் றுற்றிடா வண்ணமே ஈன்றநற்
றாய்போல் விரைந்து காக்கும்
திண்புய மீராறும் செறுநரைத் தேய்த்துபல்
செல்வங் களைய ளிக்கும்
திருப்புகழ் பாடிடு மடியர்க்குத் தஞ்சமாந்
திருவடி காட்டி நிற்கும்
பண்ணளி பாடுநற் சோலைசூழ் மாடமா
மயிலையில் வந்த மர்ந்தாய்
வள்ளி தெய்வயானை மகிழ்மண வாளனே
வள்ளல்சிங் கார வேளே.