முருகன் App
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம்
வெ.சா. ஏகாம்பரம் புலவர்
நற்றமிழ் கற்றிட3 / 11
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம் · வெ.சா. ஏகாம்பரம் புலவர்

நற்றமிழ் கற்றிட

3✓
நற்றமிழ் கற்றிட குறுமுனி தென்றிசை
நாடியுன் னருள டைந்தார்
நான்மறைப் பொருளாம் சிவனு மோங்கார
நாதத்தைக் கேட்டு ணர்ந்தார்
கற்றவர் வணங்கிடும் ஔவைப் பிராட்டிக்குக்
கனியீந்து பாடல் கொண்டாய்
கனியாத பொய்யா மொழியினை வேடனாய்க்
கனிவித்துப் பாடல் கொண்டாய்
ஒற்றியூர் தியாகனும் வடிவுடை யம்மையும்
உனதரு கிருக்க வெண்ணி
உயர்ந்தோங்கு சோலைசூழ் மாடமா மயிலையை
உறைவிட மாக்கி நின்றாய்
நற்றவர் போற்றிடும் வள்ளிதெய்வ யானையின்
நாதனே கந்த வேளே
நனிவிருப் புடனடி பணிபவர் தமக்கினி
நமபயம் நீக்கு வேளே.