முருகன் App
திருப்பரங்குன்றப் பதிகம்
க. சரவணமுத்து
அருவமே யருவுருவே9 / 11
திருப்பரங்குன்றப் பதிகம் · க. சரவணமுத்து

அருவமே யருவுருவே

8✓
அருவமே யருவுருவே யுருவே யன்னாய்
அப்பாவென் னாருயிரே அன்பே யிந்தக்
கருவினான் படுந்துயரங் கண்டாய் கண்டாய்
கர்த்தனே கஷ்டமிது நீங்க வைப்பாய்
அருவிருந்தே யருட்பழமே யனைத்துந் தந்த
வநவரத நாயகனே யாசி தாதா
பருபணியே பரங்குன்றப் பதியே வாவா
பன்னிருகைப் பாலகுகா வாவா நீயே.