முருகன் App
திருப்பரங்குன்றப் பதிகம்
க. சரவணமுத்து
உற்றாரை யுறவினரை8 / 11
திருப்பரங்குன்றப் பதிகம் · க. சரவணமுத்து

உற்றாரை யுறவினரை

7✓
உற்றாரை யுறவினரை யுலகி லுள்ள
வொருபேரை யுடலமது விடுமந் நேரம்
பற்றாகக் கொள்வேனோ கொள்வே னல்லேன்
பரமதயா பரனேயுன் பாரங் கண்டாய்
சற்றேனும் பிணிவறுமை தாங்கி லேன்நான்
சாமியினி யிகபரமுஞ் சரணுன் பாதம்
பற்றினேன் பரங்குன்றப் பதியே வாவா
பன்னிருகைப் பாலகுகா வாவா நீயே.