முருகன் App
திருப்பரங்குன்றப் பதிகம்
க. சரவணமுத்து
கண்டேனின் கருணைமுக11 / 11
திருப்பரங்குன்றப் பதிகம் · க. சரவணமுத்து

கண்டேனின் கருணைமுக

10✓
கண்டேனின் கருணைமுக மாறுங் கண்டேன்
கதிதருநி னபயவர கரங்கள் கண்டேன்
கண்டேனின் வடிவேலு மயிலுங் கண்டேன்
கந்தாவுன் றேவியரின் காட்சி கண்டேன்
கொண்டேனின் மீதுபெரு மாசை கொண்டேன்
குவலயத்தில் வேறொருவர் துணையுங் காணேன்
பண்டிதா பரங்குன்றப் பதியே வாவா
பன்னிருகைப் பாலகுகா வாவா நீயே.