முருகன் App
திருப்பரங்குன்றப் பதிகம்
க. சரவணமுத்து
குணமலையே திருவுருவே2 / 11
திருப்பரங்குன்றப் பதிகம் · க. சரவணமுத்து

குணமலையே திருவுருவே

1✓
குணமலையே திருவுருவே குருவே ஞான
குலக்கொழுந்தே யருள்விளக்கே குவல யத்தின்
பணநிதியே வளர்மதியே பற்றொன் றில்லாப்
பரம்பொருளே சுகதருவே பால சுப்ர
மணியரசே மறைவடிவே மலர்ப்பூங் கொத்தே
மாற்றுயர்ந்த பசும்பொன்னே மணவா ளாவா
பணிவேனான் பரங்குன்றப் பதியே வாவா
பன்னிருகைப் பாலகுகா வாவா நீயே.