முருகன் App
திருப்பரங்குன்றப் பதிகம்
க. சரவணமுத்து
மயிலை மருதடி விநாயகர் துதி1 / 11
திருப்பரங்குன்றப் பதிகம் · க. சரவணமுத்து

மயிலை மருதடி விநாயகர் துதி

✓
ஆலரசு மருதுகுளம் வயல்செறிவு நாடு
அங்குநடு வேதோன்று மோங்கார வீடு
பாலர்முதல் விருத்தர்தொழும் பயன்கொள்குரு மேடு
பண்புடையார்க் கருள்கொடுக்கும் பத்தியுறை கூடு
மாலயனும் போற்றுகின்ற மந்திரநல் வீடு
மறைந்திருக்க மனைதனைநீ மதியுடனே தேடு
காலமிது கணபதியின் கழலிணைகள் நாடு
காதலுட னருள்புரிவர் கருத்துடனீ பாடு.