முருகன் App
திருப்பரங்குன்றப் பதிகம்
க. சரவணமுத்து
சிரமேற்கை குவியேனான்7 / 11
திருப்பரங்குன்றப் பதிகம் · க. சரவணமுத்து

சிரமேற்கை குவியேனான்

6✓
சிரமேற்கை குவியேனான் சிவாய வென்னேன்
சிந்தியே னனுஷ்டான செபமுஞ் செய்யேன்
இரவேயோ பகலேயோ வெந்நே ரத்து
மிந்திரிய வழிமயங்கித் திரிவே னுக்கு
வரமதுதான் வரப்போமோ வாவா வீசா
வந்தனைசெய் திடவழிநீ காட்ட வாவா
பரமதிருப் பரங்குன்றப் பதியே வாவா
பன்னிருகைப் பாலகுகா வாவா நீயே.