முருகன் App
திருப்பரங்குன்றப் பதிகம்
க. சரவணமுத்து
ஆருயிரே யருமருந்தே5 / 11
திருப்பரங்குன்றப் பதிகம் · க. சரவணமுத்து

ஆருயிரே யருமருந்தே

4✓
ஆருயிரே யருமருந்தே யடியார் வேண்ட
வவர்க்கருள்செய் யனாதிமல ரகிதா வெற்குச்
சீருளநற் சுகபெலந்தா செலவுந் தாதா
ஜெயமோடு நற்குணமுஞ் சிறப்புந் தாதா
பேரறிவோ டன்புகலை ஞானந் தாதா
பிறப்பொழிய மோட்சசுக வாழ்வுந் தாதா
பாருலகாள் பரங்குன்றப் பதியே வாவா
பன்னிருகைப் பாலகுகா வாவா நீயே.