முருகன் App
திருப்பரங்குன்றப் பதிகம்
க. சரவணமுத்து
போற்றிசெயப் பற்றுறுக்கும்4 / 11
திருப்பரங்குன்றப் பதிகம் · க. சரவணமுத்து

போற்றிசெயப் பற்றுறுக்கும்

3✓
போற்றிசெயப் பற்றுறுக்கும் புனிதா நாயேன்
பூதலத்திற் பிறந்துபடும் பாடு போதும்
ஆற்றுவா ரொருவரில்லை யலைந்தே னையா
வண்டினே னாருயிரே யறிவா யென்னோய்
சாற்றினேன் பஃறரமுஞ் சாற்றி னேன்காண்
ஷண்முகனே யறுவர்முலை தரவே யன்று
பாற்குடித்தாய் பரங்குன்றப் பதியே வாவா
பன்னிருகைப் பாலகுகா வாவா நீயே.