முருகன் App
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
அம்புலிப்பருவம்8 / 11
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

அம்புலிப்பருவம்

62✓
மானைஆ கந்தழுவு வாய்இவனும் உழைதந்த
மானைஆ கந்தழுவுவான்
வனைசடைக் கங்கையலை தவழ்குழவி நீயதின்
மடித்தலக் குழவிஇவனுந்
தேனனைய மொழியறுவர் மகிழவரு வாய்இவன்
திகழுமவர் மகிழவருவான்
சிவனடியும் முடியும்நீ யறிதிமற் றவைஇவன்
சிறுவிரற் சுட்டியறிவான்
சோனைமழை யெனஅமுது பொழிகிரணன் நீஇவன்
சுககருணை யமுதுபொழிவான்
துன்னிருள் கிழித்தெழுஞ் சோதிநீ யிவனடியர்
துகளிருள் கிழித்தசோதி
யானஇம் முறைமைகொடு நீநிகர்தி யான்மகிழ்ந்
தம்புலீ யாடவாவே
அருமறையின் ஒலிநிலவு சமரபுரி முருகனுடன்
அம்புலீ யாடவாவே.
63✓
சுரர்சிலர்க் கமுதுதவி நீதேய்வை கதியமுது
தொல்லுயிர்க் குதவிநிறைவான்
தோமுறு களங்கன்நீ யிவனடியர் கனவினுஞ்
சொல்லுறு களங்கம்அறியார்
உரஅரவி னுக்குநீ வெருவுவாய் அஃதுமிவன்
ஊர்பரிக் கொருகவளமாம்
உலகைவலம் வரவுனக் கொருதினஞ் செல்லும்இவன்
ஒருநொடியி லோடிவருவான்
இரவினுக் குரியவொளி நீயிவன் அகம்புறத்
தெக்காலும் மிக்கவொளியான்
எய்துதுண் ணளிசிலர்க் குடையைநீ யனைவர்க்கும்
இவனெண்ணு தண்ணளியினான்
அரன்முத லெவர்க்குமொரு குரவனிவ னாதலால்
அம்புலீ யாடவாவே
அருமறையின் ஒலிநிலவு சமரபுரி முருகனுடன்
அம்புலீ யாடவாவே.
64✓
மதிலும்அயி லுங்கொண்டு வன்பகை தணிக்கலாம்
மலரடித் தோணிகொண்டுன்
மாறாத பவசலதி யேழுங் கடக்கலாம்
வானுலகு தொழவாழலாம்
வெயிலொளியும் நிகரல வெனப்புகல மெய்ஞ்ஞான
மிக்கவொளி பெற்றுய்யலாம்
வீடகத் துலையா திருந்தமு தருந்தலாம்
மிகுதுகட் சிறைகடியலாங்
குயிலனைய மொழியார் முகத்தினுக் கொப்பெனக்
கூறாத பெருமையுறலாங்
கொடியகய நோயகன் றெப்பொழுதும் ஒல்காத
குலிசமென வடிவுபெறலாம்
அயிலைமுள ரிக்கரங் கொண்டசே வகனுடன்
அம்புலீ யாடவாவே
அருமறையின் ஒலிநிலவு சமரபுரி முருகனுடன்
அம்புலீ யாடவாவே.
65✓
கஞ்சா தனத்தனைச் சிறையிடுவன் முத்தமிழ்க்
கவிஞனைச் சிறைவிடுப்பன்
கடியகுன் றடுவன்இருள் கடியுங் குணக்குன்று
கனகும்ப னுக்கருளுவன்
எஞ்சாத கடலழித் தரிவைமுரு காஎன்
றிசைக்கஅருள் வாரிதருவன்
இகலவுணர் களைகட் டடைந்தகட வுளரெனும்
இரும்பயிர் தழைப்பவைப்பன்
நஞ்சாய சமணர்கழு வேறவிட் டடியர்நா
டோறுமீ டேறவருவன்
நவைதழுவு புத்தன்முடி யிடறியழ லடும்என்பை
நளினமங் கைக்கினைசெய்வன்
அஞ்சா திருந்தி்டே லிவன்வெகுளி கொளுமுனம்
அம்புலீ யாடவாவே
அருமறையின் ஒலிநிலவு சமரபுரி முருகனுடன்
அம்புலீ யாடவாவே.
66✓
முக்கணா யகனரிய திருநுதற் குறுவியர்வின்
மூரிவட வையினுதித்தோன்
மூதண்ட கோளகை கிழித்தெழுந் தாயிர
முகந்தோறும் வெகுளிபொழியத்
தக்கன்மக சாலையுட் புக்கியங் குறைகின்ற
சதகோடி தேவரையெலாஞ்
சாடிக் கொழுங்குருதி யாடிப் பெருந்தாளி
யாடித் தருக்கியாடி
மிக்கவுன துடலமொரு கறியாக மாநிலம்
மிகுத்தபே ரம்மியாக
மேன்மைதரு பாதவெங் குழலிகொ டரைத்தனன்
வியர்வினா லவனையுதவும்
அக்கடவுள் கட்கனல மிக்குழவி நீவிரைந்
தம்புலீ யாடவாவே
அருமறையின் ஒலிநிலவு சமரபுரி முருகனுடன்
அம்புலீ யாடவாவே.
67✓
விரவுபல அண்டங்க ளிவன்உட்டை யெனவைத்து
விளையாடு பைங்குழற்காய்
விரிகருவி யாறாறு மிவனேவல் தலைகொண்ட
வீறாழி யக்காரராம்
பொருவரிய இருமாயை யிவனுளம் நினைத்தபடி
புரிகின்ற தாதியர்களாம்
பூரணத் திரஞான வாரியெழு சுவையமுது
போசன மிவன்தனக்கே
கருதரிய மறைநாலு மிவனர சிருக்குமொரு
கதிர்மணிச் சிங்கஅணையாய்
ககனசுரர் அனைவரும் இவனைப் பணிந்துகை
கட்டும் பெருஞ்சேனையாம்
அரிபிரம ரிவனுக் கமைச்சராம் ஆதலால்
அம்புலீ யாடவாவே
அருமறையின் ஒலிநிலவு சமரபுரி முருகனுடன்
அம்புலீ யாடவாவே.
68✓
மேகசா லங்களென நீலக் கலாபம்
விரித்துவிச் சித்திரகிரிபோல்
விண்டுவினை மேவியோர் சண்டநா கத்தனை
விடுத்தவனை வேலைமூழ்கப்
பாகுவா ரிதியளறு படமொண்டு சிவலோக
பரியந்த மேவிநின்று
பரமனுல கும்பரந் தாமனுல கும்பரி
மளிக்கின்ற கமலனுலகும்
போகமலி கற்பகா டவிநீழல் வாழ்வேபொ
லிந்தபுரு கூதனுலகும்
புகருலகு மதியுலகு கதிருலகு பூவுலகு
பொங்கப் பொழிந்துமீளும்
ஆசிறைவர் பின்வருந் தோகைஇறை தன்னுடன்
அம்புலீ யாடவாவே
அருமறையின் ஒலிநிலவு சமரபுரி முருகனுடன்
அம்புலீ யாடவாவே.
69✓
புலன்மறுகு பொறியையுறு கமடமென வுட்கொண்டு
பொருமுக் குணங்கள்வென்று
பூரகம் இரேசகந் தாரக மெனுந்தொழில்
புகன்றகா லிற்பயின்று
கலகமறு நடுநாடி சென்றுமுச் சுடர்களின்
கதிர்மண் டலங்கடந்து
கணபணா டவியுரகன் முடியிற் றுளக்கம்அறு
கம்பத்தின் அசைவற்றுளோர்
மலஇரவு விடியமிகு துறவுணர்வு நசையறுதல்
மலிகுணக் குன்றின்முடிமேல்
மன்னுஞா னக்கதி ரெழுந்தொளி பரப்பமா
றாதுதச நாதமுழுதும்
அலகில்பவ துயிலறக் கூவுசே வலனுடன்
அம்புலீ யாடவாவே
அருமறையின் ஒலிநிலவு சமரபுரி முருகனுடன்
அம்புலீ யாடவாவே.
70வேறு✓
கானவர் குலமட மானை மணந்த
கடம்பன் கரைபொருநீர்க்
கஞ்சச் சரவண அணைமிசை தனில்நனி
கண்துயில் சிறுகுழவி
ஆனவுன் மனைவி வளர்த்திடு மகனிவன்
அம்மான் உரலோடே
அன்றளை திருடிக் கட்டுணி இடையன்
அனையுஞ் சிறுவாலை
ஊனமில் அத்தன் பித்தன் இவற்கென்
றுன்னி யிருந்துவிடேல்
உலக சராசர மிவன்முத் தொழில்விட
வுண்டோ கண்டிகொலோ
வானவர் சேனா பதியுடன் ஆடிட
வாஅம் புலிவாவே
மலிசம ராபுரி முருகன தருகே
வாஅம் புலிவாவே.
71✓
குறுமுள் தாள்நெட் டிதழ்வெண் கமலக்
கோயி லிருந்தவள்தன்
கொழுநன் தொழில்தந் திடவோ பச்சைக்
கொண்டற் கிணைசெயவோ
தறுகண் சிறுகண் தழைசெவி வெள்ளைத்
தந்திக் கரசுறையுந்
தருநிழல் தரவோ துருவ னிருக்குந்
தங்கக் கிரிதரவோ
பிறவிப் பகையைத் தெறவோ தண்கலை
பிரியா தருள்தரவோ
பேசரும் மறுவில ரியாவரு நிற்கப்
பேரரு ளேதறியேம்
மறுவுற் றுளநினை வாவா என்றனன்
வாஅம் புலிவாவே
மலிசம ராபுரி முருகன தருகே
வாஅம் புலிவாவே.