திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
சிறுதேர்ப்பருவம்11 / 11
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
சிறுதேர்ப்பருவம்
92✓
மதுகரம் புக்கிடற விரைநறுங் குறியமுகை
வாய்விண்டு மடல்மடக்கி
மதுமாரி பொழிகின்ற தொங்கல்ஆ கண்டலன்
வயத்தொடுந் தேருருட்ட
விதுகரமும் மட்கவோ ராயிர கரங்கொண்டு
வேலையிருள் அள்ளியுண்டு
வெற்பின்முடி யெழுகடவுள் துர்மகற் கஞ்சாது
வியன்மணித் தேருருட்டக்
கதழெரிச் செங்குஞ்சி வெண்பற் பசுங்கட்
கரும்பேய்கள் அவுணருடலக்
கார்வரை யுருட்டமால் அட்டதிசை தனதாணை
கைக்கொளச்சக் கரமுருட்டச்
சிதைதரு பெருந்தே ருருட்டுபோ ரூரிறைவ
சிறுதே ருருட்டியருளே
சிமயமொய்த் திடுமிமய மயில்வயிற் றுதயமணி
சிறுதே ருருட்டியருளே.
93✓
மறுகுவெளி யெறியுங் கடுஞ்சிறைப் புலிநக
வளைத்துண்ட வெண்டலைச்செம்
மாமுது குடைக்கருடன் மீதிவர்ந் தொளிபெழுகு
மரகத நிறக்கடவுளும்
முறுகெரி கடுக்குஞ்சி கைப்பவள வாய்வெண்மை
மொய்த்தசிறை விள்ளாஅடி
மூதோதி மத்திவர்ந் தாரண முழக்குநா
முண்டக மனைக்கடவுளுங்
குறுகியிறு புறனும்வர நடுஇடைப் பைஞ்சிறைக்
குரகதங் கடவியடியார்
குறைகளைந் தாறுமதி வதனவழி கருணைபொழி
கொண்டலே யண்டர்அரசே
சிறுகிடைப் பெருமுலைத் தேவகுஞ் சரிகணவ
சிறுதே ருருட்டியருளே
சிமயமொய்த் திடுமிமய மயில்வயிற் றுதயமணி
சிறுதே ருருட்டியருளே.
94✓
பாததிகி ரியுமெலும் புப்பெரும் பலகையும்
பகர்நாடி யுருவாணியும்
பரியமரு மத்தட்டும் அரியசீர்க் கூவிரம்
படிறுசெறி பொறியாடியுங்
காதல்தரு குஞ்சிக்கொ டிஞ்சியும் பலமொழி
கலித்தபல் லியராசியுங்
கணமொடு மலிந்தவட லெனவுரை தரும்பெரிய
கடுவேக முடையநானா
பேதமுறு தேர்கள்மீ தாருயிர்ப் பிள்ளையைப்
பிறங்கிட விருத்திவெற்றிப்
பேசுரு மனப்புரவி கட்டிவினை வடவழிப்
பெருமநின் னருள்வலவனால்
தீதற நடத்திடச் செய்தகும ரேசனே
சிறுதே ருருட்டியருளே
சிமயமொய்த் திடுமிமய மயில்வயிற் றுதயமணி
சிறுதே ருருட்டியருளே.
95✓
உலகினொடு சரஅசர மெவையுமாய் ஒன்றினொடும்
ஒருபற் றிலாதபொருளாய்
உறுமறிவை யறிவிடத் தெழுகின்ற சிற்றிசைவில்
உயிருலகு மயிலில்பரமும்
இலகுமவை யெங்ஙன மெனிற்கருதும் அறிவொன்ற
தெழுநினைவு சுட்டுபொருளென்
றிவையோ ரிரண்டையும் இணைத்தும் பிரித்தும்
இயக்கிவரு பொருளொன்றுமாங்
கலகமுறும் அந்தநினை வின்றாகின் முப்பொருளு
மின்றுபர கதியுமிதுவே
காணென்று கடையேனை வாவென்று முடிமீது
கஞ்சமல ரடிதரித்தென்
சிலைமனங் கனிசெய்த குமரநற் குரவனே
சிறுதே ருருட்டியருளே
சிமயமொய்த் திடுமிமய மயில்வயிற் றுதயமணி
சிறுதே ருருட்டியருளே.
96✓
ஒருபொரு ளிடத்தினிற் சச்சிதா னந்தமுடன்
உருவநா மமுமுள்ளதென்
றுரைதந்து முன்னர்பின ருண்டாய் விளங்கியுறு
பிரியமா யுளமூன்றுளே
மருளிரிய வருமெய்ம்மை யுருவநா மம்பொய்ம்மை
வன்பழுதை யுறகவுருவின்
மாறா தறிந்திருதி பின்பழுதை நன்றா
மதித்தவர்க் கரவின்மையின்
இருளறும் பிரமமே நிகழுமற் றொருபொருளும்
எதிரிட் டிலங்காதென
ஏழ்பிறவி வாரிதியி லாழுமெனை வாவென்
றெடுத்தருள் அளித்தகுரவா
தெருளுறுங் கலைமுனிவர் பரவுபோ ரூர்முருக
சிறுதே ருருட்டியருளே
சிமயமொய்த் திடுமிமய மயில்வயிற் றுதயமணி
சிறுதே ருருட்டியருளே.
97வேறு✓
வடவைக் கனலென வுதரக் கனல்மிக
மண்டப் பசிவிஞ்சி
மண்டையின் மூளையை யளையென முதுபேய்
வாரி விழுங்கஅதின்
புடையிற் சிறுபேய் கெஞ்சிக் கெஞ்சிப்
பொருமி யழத்தேர்கள்
புணரிக் கலனில் குருதிக் கடலிற்
போகக் காகநிற
மிடறற் றாடு கவந்தக் குழுவினை
விரிதலை முதுகூளி
வெங்கள நாடக சாலையி லாட்ட
வெகுண்டெழும் அவுணர்கணத்
துடலைக் கறியின் அரைத்தெழு தேரன்
உருட்டுக சிறுதேரே
உமையொரு பாகற் கருமைக் குமரன்
உருட்டுக சிறுதேரே.
98✓
கவைதரு குறுமுள் தாள்ரெண் டருகுறு
கண்டற் கரியெயிறு
காணென வெண்முகை யுண்டாய் விண்டது
காலுந் துகளள்ளி
நவையறு பெடைரெண் டுக்குத விப்பகல்
நள்ளிருள் அளைமனைவாய்
நண்புறும் அஃதொடு புக்குக் கொண்டல்
நறுங்குறு துளிவீசத்
தவநனி குளிரான் உளையக் கடல்தன்
தண்திரை வண்கையால்
தரளக் கதவும் பவளக் கதவுந்
தந்தம் மனைமூடும்
உவமையில் நெய்தற் போரூ ரிறைவன்
உருட்டுக சிறுதேரே
உமையொரு பாகற் கருமைக் குமரன்
உருட்டுக சிறுதேரே.
99✓
பசுமைப் புல்லிச் செந்நிற வல்லிப்
பங்கே ருகமீதும்
பால்பாய் தாறொ டடுக்கும் மடல்குலை
பரியுங் கதலியினும்
நசையுற் றிடுகள் தேறல் பாளை
நறும்பு கத்திடையும்
நவைதீர் ஈர்வாள் நெட்டிலை முண்டக
நகுவெண் துணர்தோறுந்
திசையுற் றருமணம் வீசுபுன் னாகஞ்
செறிபுளி னத்திடையுஞ்
சினைவளை மதியமு தத்திரள் சிந்துஞ்
செய்தியின் மணிசொரியும்
உசிதக் கல்வியர் சூழ்போ ரூரன்
உருட்டுக சிறுதேரே
உமையொரு பாகற் கருமைக் குமரன்
உருட்டுக சிறுதேரே.
100✓
தரளவெண் மணியுஞ் சங்குந் துகிருந்
தடவாள் வாய்முரணுந்
தண்திரை யெறியும் வண்கட லிடையே
தந்திக் கனகோடு
நரைதரு கவரியும் நாவியும் அகிலும்
நற்சந் தக்குறடும்
நாடரு திரையால் உந்திப் பலநதி
நண்ணுறல் பண்ணுறவே
இருநில முழுதா ளரையர்க் கங்கங்
கெய்திய நிருபரெலாம்
ஏர்திறை யிட்டங் கவனு ளடங்கி
இருந்திடு முறைமானும்
உருமலி நெய்தற் போரூ ரிறைவன்
உருட்டுக சிறுதேரே
உமையொரு பாகற் கருமைக் குமரன்
உருட்டுக சிறுதேரே.
101✓
வடவரை யோரா யிரமுழை தோறும்
வருங்கொடி மினலெனவே
வாடரு கவர்நா நீள விதிர்த்திடு
மாசுண ராசனையே
கடகரி யெட்டுஞ் சென்னி கவிழ்த்துக்
கால்கள் மடித்திடவெங்
கடுவே கத்துட னோடிக் குத்திக்
கதிர்செறி புஞ்சமெனப்
படமுடி தாழ எடுத்துத றிப்பர
தத்தின் நடித்திடுமோர்
பருமயில் கடவும் பவளக் குன்றே
பால சமுத்திரமே
உடலுறு முயிர்கட் கினிதரு ளமுதம்
உருட்டுக சிறுதேரே
உமையொரு பாகற் கருமைக் குமரன்
உருட்டுக சிறுதேரே.