முருகன் App
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
வேம்படி விநாயகர் வணக்கம்1 / 11
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

வேம்படி விநாயகர் வணக்கம்

✓
அண்டகோ டிகளுடன் தந்தவுட லியாவையும்
அரியமறை முதலசலையும்
அக்கரமும் மெய்ப்பதமும் ஐங்கலையும் மந்திரமு
மானபத கதியும்வாக்கும்
மண்டியுண் டாகவரு குண்டலியொ டைஞ்சத்தி
மாமுகமெ னப்படைத்த
வள்ளிநா யகன்மீது பிள்ளையந் தமிழ்சொலஎன்
மதியில்நின் றருள்புரியுமால்
பண்டைமா மலதிமிரம் விண்டுபோ கக்கிரண
பானுகோ டிகளென்னவே
பழஅடிய ரககமலம் அகலாது நின்றொளி
பரப்பியா னந்தமுதவி
விண்டுவே முதலான அண்டர்மா முனிவர்நரர்
விக்கினம கற்றியாளுந்
மேன்மைதரு போரூரில் நிம்பநீ ழற்குலவு
வேழமுகன் இஞ்சரணமே.