முருகன் App
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
பகழிக்கூத்தர்
சிற்றிற்பருவம்9 / 11
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் · பகழிக்கூத்தர்

சிற்றிற்பருவம்

84✓
பொன்னின் மணக்கும் புதுப்புனலிற்
புடைசூழ் பணில முத்தெடுத்துப்
புறக்கோட் டகமுண் டாக்கிவலம்
புரியைத் தூதைக் கலமமைத்துக்
கன்னி மணக்குங் கழனியிற்செங்
கமலப்பொகுட்டு முகையுடைத்துக்
கக்குஞ் செழுந்தே னுலையேற்றிக்
கழைநித் திலவல் சியைப்புகட்டிப்
பன்னி மணக்கும் புதுப்பொழிலிற்
பலபூப் பறித்துக் கறிதிருத்திப்
பரிந்து சிறுசோ றடுமருமை
பாரா யயிரா வதப்பாகன்
சென்னி மணக்குஞ் சேவடியாற்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திரைமுத் தெறியுந் திருச்செந்தூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே.
85✓
தையன் மடவா ரிழைத்தவண்ட
றன்னை யழிக்கு மதுக்கல்ல
தாளமுறுத்தி யுனது பொற்பூந்
தண்டைத் திருத்தா டடியாதோ
துய்ய தவளப் பிறைமுடிக்குஞ்
சோதி யெடுத்து முகத்தணைத்துத்
தோளி லிருத்தும் பொழுதுமணித்
தோளிற் புழுதி தோயாதோ
வைய மனைத்து மீன்றெடுத்தும்
வயதுமுதிரா மடப்பாவை
மடியி லிருத்தி முலையூட்டி
வதனத் தணைக்கி லுன்கழற்காற்
செய்ய சிறுதாள் செறியாதோ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திரைமுத் தெறியுந் திருச்செந்தூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே.
86✓
தெள்ளுங் கரட மடையுடைக்குந்
தந்திப் பகடு பிடிபட்டுந்
தருவு மமுது மிருநிதியுந்
தனியே கொள்ளை போகாமா
லெவ்வ முறவிட் புலத்தமர
ரேக்க முறாம லயிராணி
யிடுமங் கலநா ணழியாம
லிமையோ ரிறைஞ்சு மரமகளிர்
பௌவ மெறியுந் துயராழிப்
பழுவத் தழுந்தி முழுகாமற்
பரக்குஞ் சுருதித் துறைவேள்வி
பழுதா காமற் பரவரிய
தெவ்வர் புரத்தை யடுஞ்சிறுவா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திரைமுத் தெறியுந் திருச்செந்தூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே.
87✓
ஆடுங் கொடித்தே ரெழுபுரவி
யருண னடத்து மகலிடத்தை
யடைவே படைத்தும் படைத்தபடி
யளித்துந் துடைத்து முத்தொழிலுங்
கூடும் பெருமை யுனக்குளது
கூடார் புரத்தைக் குழாம்பறிக்கக்
கொள்ளுங் கருத்து நின்கருத்துக்
கொங்கை சுமந்து கொடிமருங்குல்
வாடுங் கலக விழிமடவார்
மலர்கை சிவப்ப மணற்கொழித்து
வண்ட லிழைத்த மனையழிக்கை
வன்போ சுரரு மகவானுந்
தேடுங் கமலத் திருத்தாளாற்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திரைமுத் தெறியுந் திருச்செந்தூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே.
88✓
புற்றி லரவந் தனைப்புனைந்த
புனித ருடனே வீற்றிருக்கப்
பொலியுந் திகிரி வாளகிரிப்
பொருப்பை வளர்த்துச் சுவராக்கிச்
சுற்றில் வளர்ந்த வரையனைத்துஞ்
சுவர்க்கா லாக்கிச் சுடரிரவி
தோன்றி மறையுஞ் சுருப்பைவெளி
தொறுந்தோ ரணக்கா லெனநாட்டி
மற்றி லுவமை யெனுங்கனக
வரையைத் துளைத்து வழியாக்கி
மாக முகிலை விதானமென
வகுத்து மடவா ருடன்கூடிச்
சிற்றி லிழைத்த பெருமாட்டி
சிறுவா சிற்றில் சிதையேலே
திரைமுத் தெறியுந் திருச்செந்தூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே.
89✓
மிஞ்சுங் கனக மணித்தொட்டின்
மீதே யிருத்தித் தாலுரைத்து
வேண்டும் படிசப் பாணிகொட்டி
விருப்பாய் முத்தந் தனைக்கேட்டு
நெஞ்சு மகிழ வரவழைத்து
நிலவை வருவா யெனப்புகன்று
நித்த லுனது பணிவிடையி
னிலைமை குலையேம் நீயறிவாய்
பிஞ்சு மதியி னொருமருப்புப்
பிறங்கு மிருதாட் கவுட்சுவடு
பிழியுங் கரட மும்மதத்துப்
பெருத்த நால்வாய்த் திருத்தமிகு
மஞ்சு கரக்குஞ் சரத்துணையே
யடியேஞ் சிற்றி லழியேலே
யலைமுத் தெறியுந் திருச்செந்தூ
ரரசே சிற்றி லழியேலே.
90✓
துன்று திரைக்கூண் டகழ்மடுவிற்
சூர னொளிக்கப் பகைநிருதர்
தொல்லைப் பதியு மவரிருந்து
துய்த்த வளமுந் தூளாக்கி
வென்று செருவிற் பொருதுழித்தாய்
வேதா விதித்த விதிப்படியை
விலக்கி வெகுண்டு மீண்டளித்தாய்
வேண்டு மடியார் வினையொழித்தாய்
கன்று மமணர் கழுவேறக்
காழிப் பதியில் வந்துதித்துக்
கள்ளப் பிரச மயக்குறும்பு
கலக மொழித்துக் கட்டழித்தா
யன்று தொடுத்துன் வழியடிமை
யடியேஞ் சிற்றில் சிதையேலே
அலைமுத் தெறியுந் திருச்செந்தூ
ரரசே சிற்றில் சிதையேலே.
91✓
களிப்பா ருனைக்கண் டவரவரே
கண்ணு மனமும் வேறாகிக்
கள்ள னிவனை நம்முடைய
காதல் வலையிற் கட்டுமென
விளிப்பார் விரக மங்குரித்த
வேடப் பலிப்பைப் பாரென்று
மெள்ள நகைப்பா ரிவருடனே
விளையாடாமல் வேறாகித்
துளிப்பார் திரைக்கூண் டகழுடுத்த
தொல்லைப் பதியும் பகிரண்டத்
தொகையுந் தொகையில் பல்லுயிருந்
தோற்ற மொடுக்கந் துணையாய்நின்
றளிப்பா யழிக்கை கடனலகா
ணடியேஞ் சிற்றி லழியேலே
அலைமுத் தெறியுந் திருச்செந்தூ
ரரசே சிற்றி லழியேலே.
92✓
கூவிப் பரிந்து முலைத்தாயர்
கூட்டி யெடுத்து முலையூட்டிக்
குடுமி திருத்தி மலர் செருகிக்
கோலம் புனைந்து கொண்டாடிப்
பூவிற் பொலிந்த திருமேனிப்
புனிதா வண்டற் புறத்தெயிலிற்
புகுந்தா லினியுன் னுடலேறப்
புழுதி யிறைத்துப் போகாமற்
காவிக் குறுந்தோட் டிதழ்நெருக்குங்
கண்ணி தனைக்கொண் டோச்சிவளைக்
கானற் றரளத் தொடையாலுன்
கைத்தா மரையைக் கட்டிவிடோ
மாவித் துணையே வழியடிமை
யடியேஞ் சிற்றி லழியேலே
அலைமுத் தெறியுந் திருச்செந்தூ
ரரசே சிற்றி லழியேலே.
93✓
பொய்யா வளமை தரும்பெருமைப்
பொருநைத் துறையி னீராட்டிப்
பூட்டுங் கலன்கள் வகைவகையே
பூட்டி யெடுத்து முலையூட்டி
மெய்யா லணைத்து மறுகுதனில்
விட்டா ரவரைவெ றாமலுனை
வெறுக்க வேறு கடனுமுண்டோ
விரும்பிப் பரலைக் கொழித்தெடுத்துக்
கையா லிழைத்த சிற்றிலைநின்
காலா லழிக்கை கடனலகாண்
காப்பா னழிக்கத் தொடங்கிலெங்கள்
கவலை யெவரோ டினியுரைப்போ
மையா வுனது வழியடிமை
யடியேஞ் சிற்றி லழியேலே
அலைமுத் தெறியுந் திருச்செந்தூ
ரரசே சிற்றி லழியேலே.